Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் பயங்கர தீ விபத்து


நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; மூன்று வீடுகள் முற்றாகத் தீக்கிரை

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்புப் பகுதியில் நேற்று (16) இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக மூன்று வீடுகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் அந்த வீடுகளில் வசித்து வந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் தற்காலிகமாகத் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். தீ விபத்தின் போது வீடுகளில் இருந்த பெறுமதியான உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்று இரவு திடீரெனத் தீ பரவியதைக் கண்ட குடியிருப்பாளர்கள் கூச்சலிட்டதை அடுத்து, அயலவர்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று சந்தித்த நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ஆனந்தராஜ், கிராம சேவகரின் உதவியுடன் அவர்களுக்குத் தேவையான அவசர நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். நுவரெலியா பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

නුවරඑළිය බඹරකැලේ ලැයිම් නිවාස පෙළක ගින්නක්; නිවාස තුනක් සම්පූර්ණයෙන්ම විනාශ වෙයි

නුවරඑළිය - මහනුවර ප්‍රධාන මාර්ගයේ පිහිටි බඹරකැලේ PWD ලැයිම් නිවාස පෙළක ඊයේ (16) රාත්‍රියේ හටගත් හදිසි ගින්නකින් නිවාස තුනක් සම්පූර්ණයෙන්ම විනාශ වී තිබේ. මෙම ගින්න හේතුවෙන් එම නිවාසවල පදිංචිව සිටි පවුල් තුනකට අයත් පුද්ගලයන් 12 දෙනෙකු අවතැන් වී ඇති අතර ඔවුන් මේ වන විට තාවකාලිකව ඥාති නිවාසවල නවාතැන් ගෙන සිටිති.

ගින්නෙන් නිවාසවල තිබූ වටිනා දේපළ රැසක් විනාශ වී ඇති බව වාර්තා වේ. ගින්න හටගත් අවස්ථාවේ ප්‍රදේශවාසීන් සහ නුවරඑළිය මහ නගර සභාවේ ගිනි නිවන ඒකකය එක්ව දැඩි උත්සාහයකින් ගින්න මැඩපවත්වා තිබේ. ගින්නට හේතුව මෙතෙක් අනාවරණය වී නොමැති අතර නුවරඑළිය පොලිසිය මේ පිළිබඳව වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි. නුවරඑළිය මහ නගර සභා මන්ත්‍රී සුබ්‍රමනියම් ආනන්දරාජ් මහතා එම ස්ථානයට පැමිණ අවතැන් වූවන් සඳහා අවශ්‍ය සහන සැලසීමට ග්‍රාම නිලධාරීවරයාගේ සහය ඇතිව පියවර ගෙන ඇත.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

Fire Breaks Out at Bamarakelle Housing Row in Nuwara Eliya; Three Houses Completely Destroyed

A sudden fire broke out last night (16) at the Bamarakelle PWD housing row located on the Nuwara Eliya - Kandy main road, completely destroying three houses. Twelve members from three families affected by the fire have been temporarily relocated to their relatives' homes. All valuable belongings within the houses were reduced to ashes in the blaze.

The fire was brought under control following a swift response from neighbors and the Nuwara Eliya Municipal Council's fire brigade. While the exact cause of the fire remains unknown, Nuwara Eliya Police have launched an investigation into the incident. Nuwara Eliya Municipal Council member Subramaniam Anantharaj visited the victims and is coordinating with the Grama Niladhari to provide necessary assistance and relief measures to the displaced families.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் பயங்கர தீ விபத்து Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.