நாளை முதல் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் ஆய்வாளர் தகவல்
நாளை முதல் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் ஆய்வாளர் தகவல்
இலங்கையில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலைக்கு மத்தியில், நாளை (20) முதல் வரும் 26 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். குறிப்பாக வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
தற்போது நிலவும் அதீத வெப்பம் காரணமாக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேற்காவுகைச் செயற்பாடுகள், நீராவியின் மேலுயர்த்துகை மற்றும் வளி குளிரடைதல் போன்ற காரணிகளால் இந்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்தினால் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வரும் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, வட மத்திய மற்றும் மேல் மாகாண மக்களுக்கு இந்த மழை ஒரு பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மழை பெய்யும் நேரங்களைத் தவிர்ந்த ஏனைய காலப்பகுதிகளில் வெப்பமான வானிலையே தொடரும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய தரவுகளின்படி, கடந்த 19 நாட்களில் வடக்கில் சராசரியாக 36.3 பாகை செல்சியஸும், கிழக்கில் 36.5 பாகை செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் மூலம், இலங்கையின் வரலாற்றில் அதிக வெப்பம் நிலவிய ஏப்ரல் மாதமாக நடப்பு ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
හෙට සිට දිවයිනේ ප්රදේශ රැසකට වැසි; දැඩි රශ්මියෙන් පීඩා විඳි ජනතාවට සහනයක්
පවතින දැඩි උණුසුම් කාලගුණය මධ්යයේ හෙට (20) සිට ලබන 26 වනදා දක්වා උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළු දිවයිනේ ප්රදේශ රැසකට වැසි ඇති විය හැකි බව කාලගුණ විද්යා පර්යේෂක නාගමුත්තු ප්රදීපරාජා මහතා පවසයි. විශේෂයෙන් වයඹ සහ මධ්යම පළාත්වල ඇතැම් ස්ථානවලට තරමක තද වැසි ඇති වීමේ හැකියාවක් පවතින බවද ඔහු සඳහන් කරයි.
වායුගෝලයේ පවතින අධික උණුසුම හේතුවෙන් ඇති වූ සංවහන ක්රියාවලිය මෙම වැසි තත්ත්වයට ප්රධාන හේතුව වී තිබේ. පසුගිය දින කිහිපය පුරා දැඩි උණුසුමෙන් පීඩාවට පත්ව සිටි උතුර, නැගෙනහිර, වයඹ, උතුරු මැද සහ බස්නාහිර පළාත්වල ජනතාවට මෙම වැසි තත්ත්වය මහත් සහනයක් වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
කෙසේ වෙතත් වැසි නොමැති අවස්ථාවන්හිදී තවදුරටත් උණුසුම් කාලගුණයක් පවතිනු ඇති බවත්, ගතවූ දින 19 තුළ උතුරු පළාතේ සාමාන්ය උෂ්ණත්වය සෙල්සියස් අංශක 36.3ක් සහ නැගෙනහිර පළාතේ අංශක 36.5ක් ලෙස වාර්තා වී ඇති බවත් සඳහන් වේ. ඒ අනුව මෙම වසරේ අපේළ් මාසය ඉතිහාසයේ වැඩිම උෂ්ණත්වයක් වාර්තා වූ අපේළ් මාසය ලෙස සටහන් වී තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Widespread Rain Expected Across Sri Lanka from Tomorrow; Relief from Severe Heat
Moderate rainfall is expected across many parts of the country, including the Northern and Eastern provinces, from tomorrow (20th) to April 26th, according to meteorological researcher Nagamuthu Pradeeparaja. He noted that certain areas in the North-Western and Central provinces might experience slightly heavy showers during this period.
The atmospheric conditions created by the prevailing high temperatures have led to convective activity, resulting in these anticipated rains. This change in weather is expected to bring significant relief to residents in the Northern, Eastern, North-Western, North-Central, and Western provinces, who have been struggling with intense heat over the past few days.
However, the warm weather is expected to persist during non-rainy intervals. According to data recorded over the past 19 days, the average temperature in the North stood at 36.3°C, while the Eastern province recorded 36.5°C. Consequently, this April is being recorded as the month with the highest temperatures ever documented in Sri Lankan history.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
நாளை முதல் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் ஆய்வாளர் தகவல்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 19, 2026
Rating:
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 19, 2026
Rating:

கருத்துகள் இல்லை: