மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பலத்த மழை ஐந்து இடங்களுக்கு சூரியன் உச்சம்
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பலத்த மழை; ஐந்து இடங்களுக்கு இன்று சூரியன் உச்சம் கொடுக்கும்
இன்றைய தினம் (ஏப்ரல் 15) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (15) நண்பகல் 12.10 மணிக்கு பண்டத்தரிப்பு, தெல்லிப்பழை, வருத்தலைவிளான், வசவிளான் மற்றும் மணற்காடு ஆகிய பிரதேசங்களுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
බස්නාහිර සහ සබරගමුවට තද වැසි; අද දිනයේ ප්රදේශ කිහිපයකට හිරු මුදුන් වෙයි
අද (අප්රේල් 15) පස්වරු 1.00 න් පසු දිවයිනේ ප්රදේශ කිහිපයකට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැකි බව කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි. බස්නාහිර, සබරගමුව, මධ්යම, දකුණු සහ වයඹ පළාත්වලත් අනුරාධපුර දිස්ත්රික්කයේත් මෙලෙස වැසි ඇති විය හැක.
බස්නාහිර සහ සබරගමුව පළාත්වලත් ගාල්ල සහ මාතර දිස්ත්රික්කවලත් ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 50 ක පමණ තරමක් තද වැසි ඇති විය හැකි බව අපේක්ෂා කෙරේ. මධ්යම, සබරගමුව, උතුරු මැද සහ ඌව පළාත්වලත් ගාල්ල, මාතර, වවුනියාව සහ කුරුණෑගල දිස්ත්රික්කවලත් උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් පැවතිය හැක. ගිගුරුම් සහිත වැසි සමඟ ඇති විය හැකි තාවකාලික තද සුළං සහ අකුණු මඟින් සිදු වන අනතුරු අවම කර ගැනීමට පියවර ගන්නා ලෙස ජනතාවගෙන් ඉල්ලා සිටිනු ලැබේ.
හිරු උතුරට ගමන් කිරීමේ සාපේක්ෂ චලිතය අනුව අද (15) දහවල් 12:10 ට පණ්ඩතරිප්පු, තෙල්ලිප්පලෙයි, වරුතලෙයිවිලාන්, වාසවිලාන් සහ මනට්කාඩු යන ප්රදේශවලට හිරු සෘජුවම ඉහළින් පවතිනු ඇත.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
Heavy Rain Expected in Western and Sabaragamuwa Provinces; Sun Directly Overhead for Five Areas Today
Showers or thundershowers are expected in several parts of Sri Lanka after 1.00 p.m. today (April 15), according to the Department of Meteorology. Areas in the Western, Sabaragamuwa, Central, Southern, and North-Western provinces, as well as the Anuradhapura district, are likely to experience rainfall.
Fairly heavy falls of about 50 mm are probable in some locations within the Western and Sabaragamuwa provinces and the Galle and Matara districts. Additionally, misty conditions are expected during the early hours in the Central, Sabaragamuwa, North-Central, and Uva provinces, along with the Galle, Matara, Vavuniya, and Kurunegala districts. The public is advised to take precautions against potential damages from localized strong winds and lightning during thundershowers.
Furthermore, as the sun continues its apparent northward motion, it will be directly over Pandatharippu, Thellippalai, Varuthaleivilan, Vasavilan, and Manatkaadu at approximately 12:10 noon today.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பலத்த மழை ஐந்து இடங்களுக்கு சூரியன் உச்சம்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 15, 2026
Rating:
கருத்துகள் இல்லை: