வெப்பச் சுட்டெண் அதிகரிப்பு; பல மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை
வெப்பச் சுட்டெண் அதிகரிப்பு; பல மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை
நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் (Heat Index) எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆலோசனையானது நாளை (2026 ஏப்ரல் 15) வரை செல்லுபடியாகும் வகையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
வெப்பச் சுட்டெண் என்பது வளிமண்டலத்தின் ஈரப்பதன் மற்றும் வெப்பநிலையைப் பயன்படுத்தி கணிக்கப்படுவதாகும். இது உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவைக் குறிக்கும். சுட்டெண் 46-52 வரை இருந்தால் அது தீவிர எச்சரிக்கை மட்டமாகக் கருதப்படும். இதன்போது அதிக நேரம் வெயிலில் இருந்தால் களைப்பு, சோர்வு மற்றும் வெப்பத் தசைப்பிடிப்பு (Heat cramps) ஏற்படலாம். சுட்டெண் 52 இற்கு மேல் சென்றால் அது அபாயகரமானது. இதனால் வெப்பத்தால் நீர் இழப்பு (Heat exhaustion) மற்றும் வெப்பப் பாரிசவாதம் (Heat stroke) ஏற்படும் அபாயம் அதிகம் உண்டு.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள்:
வேலைத்தளங்கள் மற்றும் வெளியகப் பகுதிகளில்: போதியளவு தண்ணீர் அருந்துங்கள். நிழலான பகுதிகளில் ஓய்வெடுங்கள். அதிக களைப்பை ஏற்படுத்தும் வேலைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
உள்ளகப் பகுதிகளில்: வயதானவர்களையும் நோயாளிகளையும் விசேடமாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
வாகனங்களில்: சிறுவர்களை ஒருபோதும் வாகனங்களுக்குள் கவனிப்பின்றி விட்டுச் செல்ல வேண்டாம்.
ஆடை: இலேசான, வெண்ணிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள்.
இது குறித்து மேலதிக விளக்கங்களுக்கு 011-7446491 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
උණුසුම් දර්ශකය ඉහළ යාම පිළිබඳ විශේෂ උපදේශනයක්; පළාත් කිහිපයකට දැඩි අවධානයක්
උතුරු, උතුරු-මැද, වයඹ, බස්නාහිර, දකුණ සහ නැගෙනහිර පළාත්වල මෙන්ම මොණරාගල දිස්ත්රික්කයේ ඇතැම් ස්ථානවල මිනිස් සිරුරට දැනෙන උණුසුම (Heat Index) "අවධානය යොමු කළ යුතු" මට්ටම දක්වා වැඩි විය හැකි බව ස්වභාවික විපත් පිළිබඳ පූර්ව අනතුරු ඇඟවීමේ අංශය දන්වා සිටී. මෙම උපදේශනය 2026 අප්රේල් 15 වනදා දක්වා බලපැවැත්වෙන පරිදි අද පස්වරු 3.30 ට නිකුත් කර ඇත.
උණුසුම් දර්ශකය 46-52 අතර පවතින්නේ නම් එය දැඩි අවධානය යොමු කළ යුතු මට්ටමකි. මෙහිදී අධික වෙහෙස, මාංශ පේශි පෙරළීම (Heat cramps) සහ විජලනය ඇති විය හැක. දර්ශකය 52 ට වඩා වැඩි වුවහොත් තාප කල්පිතය (Heat stroke) වැනි බරපතල සෞඛ්ය ගැටලු ඇති වීමේ අවදානමක් පවතී.
ජනතාව පිළිපැදිය යුතු උපදෙස්:
වැඩබිම් සහ එළිමහනේ: ප්රමාණවත් පරිදි ජලය පානය කරන්න. සෙවණ ඇති ස්ථානවල විවේක ගන්න. දැඩි වෙහෙසකාරී කටයුතු අවම කරන්න.
නිවෙස් තුළ: වැඩිහිටියන් හා රෝගීන් පිළිබඳ විශේෂ අවධානයක් යොමු කරන්න.
වාහන තුළ: කුඩා දරුවන් කිසිවිටෙකත් වාහන තුළ තනිව රඳවා නොයන්න.
ඇඳුම්: සැහැල්ලු සහ ලා පැහැති ඇඳුම් අඳින්න.
වැඩිදුර තොරතුරු සඳහා 011-7446491 අංකය ඔස්සේ කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව සම්බන්ධ කර ගත හැක.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
Heat Index Advisory Issued for Several Provinces; Public Urged to Stay Cautious
The Natural Hazards Early Warning Centre has issued a high-temperature advisory effective until April 15, 2026. The heat index—the temperature felt by the human body—is expected to rise to the "Caution" level in parts of the Northern, North-Central, North-Western, Western, Southern, and Eastern provinces, as well as in the Monaragala district.
A heat index between 46-52 can lead to fatigue, heat cramps, and exhaustion during prolonged outdoor activities. If the index exceeds 52, the risk of heatstroke becomes significant. This index is calculated based on relative humidity and maximum temperature and is not a direct forecast of the air temperature itself.
Recommended Actions:
Workplaces & Outdoors: Stay hydrated by drinking plenty of water. Take frequent breaks in shaded areas and limit strenuous outdoor activities.
Indoors: Monitor the elderly and those with pre-existing health conditions closely.
Vehicles: Never leave children unattended in parked vehicles.
Clothing: Wear lightweight, white, or light-colored clothing.
For further clarification, the public may contact the Department of Meteorology at 011-7446491.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
வெப்பச் சுட்டெண் அதிகரிப்பு; பல மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 14, 2026
Rating:
கருத்துகள் இல்லை: