அக்கரைப்பற்றில் "UNBOUND" வனவிலங்கு ஒளிப்படக் கண்காட்சி; மே 1 முதல் 3 வரை அனுமதி இலவசம்
அக்கரைப்பற்றில் "UNBOUND" வனவிலங்கு ஒளிப்படக் கண்காட்சி; மே 1 முதல் 3 வரை அனுமதி இலவசம்
வனவிலங்கு ஒளிப்படக் கலைஞர் உவைஸ் முஹைதீனின் இரண்டாவது தனிநபர் ஒளிப்படக் கண்காட்சியான "UNBOUND" (அன்பவுண்ட்), எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது. காத்தான்குடியில் வெற்றிகரமாக இடம்பெற்ற இக்கண்காட்சியின் இரண்டாம் கட்டம், அக்கரைப்பற்று ஹல்லாஜ் தகவல் வள மையத்தின் (Hallaj Information Resource Centre) மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர்கள் நிறைந்த ஊரான அக்கரைப்பற்றில், ஒளிப்படக்கலைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மற்றும் 'Club Photo Ceylonica' அமைப்பின் பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்தக் கண்காட்சியை அங்கு நடத்தத் தீர்மானித்ததாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. கண்காட்சி எதிர்வரும் 01.05.2026 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 4.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும்.
கண்காட்சி நடைபெறும் நேரங்கள்:
* மே 01 (வெள்ளி): பிற்பகல் 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை
* மே 02 (சனி) & 03 (ஞாயிறு): காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
வனவிலங்குகளின் அழகிய தருணங்களை வெளிப்படுத்தும் இக்கண்காட்சியுடன் இணைந்து, ஒளிப்படவியல் தொடர்பான கலந்துரையாடல்களும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இந்தக் கண்காட்சி மற்றும் செயலமர்வுகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி முற்றிலும் இலவசமாகும். ஒளிப்படக் கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
අක්කරෙයිපත්තුවේදී "UNBOUND" වනජීවී ඡායාරූප ප්රදර්ශනය; මැයි 1 සිට 3 දක්වා ඇතුළුවීම නොමිලේ
වනජීවී ඡායාරූප ශිල්පී උවයිස් මුහයිදීන්ගේ දෙවන ඒකල ඡායාරූප ප්රදර්ශනය වන "UNBOUND" (අන්බවුන්ඩ්) එළඹෙන මැයි මස 1 වනදා සිට 3 වනදා දක්වා අක්කරෙයිපත්තුවේදී පැවැත්වේ. කාත්තන්කුඩි හිදී සාර්ථකව නිම වූ මෙම ප්රදර්ශනයේ දෙවන අදියර, අක්කරෙයිපත්තුව හල්ලාජ් තොරතුරු සම්පත් මධ්යස්ථානයේ (Hallaj Information Resource Centre) ශ්රවණාගාරයේදී පැවැත්වීමට කටයුතු යොදා ඇත.
කලාවට සහ ඡායාරූපකරණයට ලැදි ජනතාවක් වෙසෙන අක්කරෙයිපත්තුවේ, 'Club Photo Ceylonica' සංවිධානය විසින් ඉටුකරන මෙහෙවර සැලකිල්ලට ගනිමින් මෙම ප්රදර්ශනය එහි පැවැත්වීමට තීරණය කළ බව සංවිධායක කමිටුව පවසයි. ප්රදර්ශනය 2026.05.01 වන සිකුරාදා පස්වරු 4.00 ට නිල වශයෙන් ආරම්භ වීමට නියමිතය.
ප්රදර්ශනය පැවැත්වෙන වේලාවන්:
* මැයි 01 (සිකුරාදා): පස්වරු 4:00 සිට රාත්රී 10:00 දක්වා
* මැයි 02 (සෙනසුරාදා) සහ 03 (ඉරිදා): පෙව 11:00 සිට පස්වරු 6:00 දක්වා
වනජීවීන්ගේ අලංකාර අවස්ථාවන් නිරූපණය වන මෙම ප්රදර්ශනයට සමගාමීව ඡායාරූපකරණය පිළිබඳ සාකච්ඡා සභා ද සංවිධානය කර ඇත. ප්රදර්ශනය සහ වැඩමුළු සඳහා ඇතුළුවීම සම්පූර්ණයෙන්ම නොමිලේ වන අතර, ඡායාරූපකරණයට ලැදි සැමට මීට විවෘතව ආරාධනා කෙරේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
"UNBOUND" Wildlife Photography Exhibition in Akkaraipattu from May 1-3; Admission Free
Wildlife Photographer Uwais Mohideen's second solo photography exhibition, "UNBOUND," will be held in Akkaraipattu from May 1st to 3rd. Following a successful run in Kattankudy, the second phase of this exhibition is scheduled to take place at the Hallaj Information Resource Centre Hall in Akkaraipattu.
The organizing committee decided to host the exhibition in Akkaraipattu, recognizing the town's vibrant artistic community and the significant contributions of the 'Club Photo Ceylonica' organization. The inauguration ceremony is set for Friday, May 1st, 2026, at 4:00 PM.
Exhibition Hours:
* May 1 (Friday): 4:00 PM to 10:00 PM
* May 2 (Saturday) & 3 (Sunday): 11:00 AM to 6:00 PM
The exhibition, showcasing stunning moments of wildlife, will be complemented by discussion sessions related to photography. Admission to the exhibition and workshops is completely free. Photography enthusiasts and the general public are warmly invited to attend.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 22, 2026
Rating:

கருத்துகள் இல்லை: