வறுமை ஒழிப்பிற்கான சமூக சக்தி திட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மீளாய்வு
வறுமை ஒழிப்பிற்கான சமூக சக்தி திட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மீளாய்வு
சமூக சக்தி வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தின் இதுவரைக்கால முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கிராமப்புற வறுமையை ஒழித்து, கிராமியச் சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அரசாங்கத்தின் முதன்மைத் திட்டம் குறித்த முக்கிய விபரங்கள் இக்கலந்துரையாடலில் வெளியிடப்பட்டன:
* நிதி ஒதுக்கீடு: 2026 வரவுசெலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 25,000 மில்லியன் ரூபாயில், இதுவரை 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* திட்டங்கள்: இந்த நிதி ஒதுக்கீடுகள் வாழ்வாதார அபிவிருத்தி, உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சமூக அபிவிருத்தி சபைகளால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
* அமுலாக்கம்: அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்கனவே மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
* சபைகள் அமைப்பு: கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் இதுவரை 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் வெற்றிகரமாக நிறுவி முடிக்கப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி, இத்திட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் இது எந்தளவு பங்களிப்பு செய்கிறது என்பது குறித்து தொடர்ச்சியான மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சமூக அபிவிருத்தி சபை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 25 மாவட்டங்களிலும் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
KR TV Network / KR TV Lankan Voice
தேசிய செய்தி
ප්රජා ශක්ති ජාතික වැඩසටහනේ ප්රගතිය ජනපති අනුර කුමාර දිසානායක මහතාගේ අධීක්ෂණයට
ප්රජා ශක්ති දිළිඳු බව තුරන් කිරීමේ ජාතික ව්යාපාරයේ මෙතෙක් ප්රගතිය සමාලෝචනය කිරීම සඳහා ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්රධානත්වයෙන් අද (11) ජනාධිපති කාර්යාලයේදී විශේෂ සාකච්ඡාවක් පැවැත්විණි.
ග්රාමීය දිළිඳුකම පිටුදැකීම සහ ග්රාමීය ප්රජාව නඟා සිටුවීමේ අරමුණින් රජයේ ප්රමුඛ වැඩසටහනක් ලෙස ක්රියාත්මක ප්රජා ශක්ති වැඩසටහන පිළිබඳව මෙහිදී අනාවරණය වූ වැදගත් තොරතුරු කිහිපයක් පහත දැක්වේ:
* මූල්ය ප්රතිපාදන: 2026 අයවැයෙන් මෙම වැඩසටහන සඳහා වෙන් කරන ලද රුපියල් මිලියන 25,000 ක ප්රතිපාදනවලින්, මේ වන විටත් රුපියල් මිලියන 23,000 ක සංවර්ධන ව්යාපෘති අනුමත කර අවසන්ය.
* ව්යාපෘති: ජීවනෝපාය සංවර්ධනය, නිෂ්පාදන ආර්ථිකය සහ ආහාර සුරක්ෂිතතාවට අදාළව ප්රජා සංවර්ධන සභා මගින් ප්රමුඛතාගත කළ ව්යාපෘති සඳහා මෙම ප්රතිපාදන වෙන් කර ඇත.
* ක්රියාත්මක කිරීම: අනුමත කරන ලද ව්යාපෘති ක්රියාත්මක කිරීම සඳහා දිස්ත්රික් ලේකම්වරුන් වෙත යොමු කර තිබේ.
* සභා පිහිටුවීම: ග්රාම නිලධාරී වසම් මට්ටමින් ප්රජා සංවර්ධන සභා 13,977ක් මේ වන විට පිහිටුවා අවසන්ය.
මෙහිදී ජනාධිපතිවරයා, මෙම ව්යාපෘතිවලින් ලැබෙන ප්රතිලාභ ප්රමාණය සහ ජන ජීවිතය නංවාලීම වෙනුවෙන් එය කොපමණ දායක වන්නේද යන්න පිළිබඳ නිරන්තර පසු විපරමකින් කටයුතු කිරීමේ වැදගත්කම පෙන්වා දුන්නේය.
තවද, වැඩසටහන ක්රියාත්මක කිරීම සඳහා තොරතුරු තාක්ෂණ යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීම සහ ප්රජා සංවර්ධන සභාවල නිලධාරින් දැනුවත් කිරීම සඳහා දිස්ත්රික්ක 25 ම ආවරණය වන පරිදි පුහුණු වැඩසටහන් ක්රියාත්මක කිරීම පිළිබඳවද ජනාධිපතිවරයා දැනුවත් කෙරිණි.
ග්රාමීය සංවර්ධන, සමාජ ආරක්ෂණ සහ ප්රජා සවිබල ගැන්වීමේ අමාත්ය උපාලි පන්නිලගේ, නියෝජ්ය අමාත්ය වසන්ත පියතිස්ස ඇතුළු අමාත්යාංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක් මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.
KR TV Network / KR TV Lankan Voice
ජාතික පුවත්
President Anura Kumara Dissanayake Reviews Progress of Prajashakthi National Movement
President Anura Kumara Dissanayake presided over a discussion held today (11) at the Presidential Secretariat to review the progress achieved thus far under the Prajashakthi National Poverty Alleviation Programme.
The Prajashakthi programme is a flagship government initiative aimed at eradicating rural poverty and uplifting rural communities. Key details revealed during the discussion included:
* Financial Allocations: Of the LKR 25,000 million allocated in the 2026 Budget for this programme, development projects valued at LKR 23,000 million have already been approved.
* Projects: The allocations have been directed towards projects prioritised by Community Development Councils in the areas of livelihood development, the production economy, and food security.
* Implementation: The approved projects have already been forwarded to District Secretaries for implementation.
* Councils Established: A total of 13,977 Community Development Councils have been successfully established at the Grama Niladhari Division level.
During the discussion, the President highlighted the importance of maintaining continuous follow-up regarding the implementation of projects, the benefits generated, and the extent to which they contribute towards improving the living standards of the people.
Furthermore, the President was informed of measures taken to strengthen information technology infrastructure for the programme's implementation and the conducting of training programmes across all 25 districts to raise awareness among officials attached to Community Development Councils.
Minister of Rural Development, Social Security and Community Empowerment, Upali Pannilage, Deputy Minister Wasantha Piyatissa, along with senior officials from the ministry, were also present at the discussion.
KR TV Network / KR TV Lankan Voice
National News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 11, 2026
Rating:



கருத்துகள் இல்லை: