Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்: சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்


 தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்: சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்கள் இன்று (மே 10) காலை 10.00 மணிக்குத் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த விழாவில், அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், வரும் மே 13 ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்குமாறு திரு. விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சென்னை வருகை தருகிறார். பாதுகாப்பு மற்றும் இடவசதி கருதி 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, QR குறியீடு கொண்ட அனுமதிப்பத்திரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இந்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


KR TV Network

KR TV Lankan Voice

சர்வதேச செய்தி


තමිල්නාඩු මහ ඇමති ලෙස විජයි මහතා අද දිවුරුම් දෙයි: චෙන්නායි නේරු ක්‍රීඩාංගණයේ සියලු කටයුතු සූදානම්


තමිල්නාඩු වෙට්රි කසාගම් නායක විජයි මහතා අද (මැයි 10) පෙරවරු 10.00 ට තමිල්නාඩුවේ නව මහ ඇමතිවරයා ලෙස දිවුරුම් දීමට නියමිතය. චෙන්නායි නේරු ගෘහස්ථ ක්‍රීඩාංගණයේ පැවැත්වෙන මෙම උත්සවයේදී ඔහු සමඟ තවත් අමාත්‍යවරුන් අට දෙනෙකු දිවුරුම් දීමට නියමිත බව වාර්තා වේ. බහුතර බලය සහිත රජයක් පිහිටුවීමට ආණ්ඩුකාරවරයා අවසර ලබා දී ඇති අතර, මැයි 13 වනදාට පෙර ව්‍යවස්ථාදායක සභාවේ බහුතරය තහවුරු කරන ලෙස විජයි මහතාට දැනුම් දී ඇත.


මෙම අවස්ථාවට සහභාගී වීම සඳහා ඉන්දීය විපක්ෂ නායක රාහුල් ගාන්ධි මහතා අද උදෑසන චෙන්නායි බලා පැමිණීමට නියමිතය. ආරක්ෂක හේතූන් මත පිරිස 5,000 කට සීමා කර ඇති අතර QR කේතය සහිත බලපත්‍ර අනිවාර්ය කර ඇත. මුළු තමිල්නාඩුව පුරාම මෙම උත්සවය සජීවීව විකාශය කෙරෙන අතර දැඩි ආරක්ෂක රැකවල් යොදවා තිබේ.


KR TV Network

KR TV Lankan Voice

ජාත්‍යන්තර පුවත්


Vijay to Take Oath as Tamil Nadu Chief Minister Today: Grand Ceremony at Nehru Stadium


Tamilaga Vettri Kazhagam (TVK) leader Vijay is set to be sworn in as the Chief Minister of Tamil Nadu today (May 10) at 10:00 AM. The ceremony will take place at the Nehru Indoor Stadium in Chennai, where Vijay, along with 8 other ministers, including Bussy Anand, Sengottaiyan, and Aadhav Arjuna, will take their oaths. Following the Governor’s invitation to form the government, Vijay has been directed to prove his majority in the Assembly by May 13th.


Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, is arriving in Chennai this morning to attend the event. Attendance is limited to 5,000 guests with mandatory QR-coded invites. While the event is broadcast live across the state, security has been significantly heightened to ensure a smooth transition.


KR TV Network

KR TV Lankan Voice

International News

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்: சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் Reviewed by KR TV LANKAN VOICE on மே 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.