Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அமானா வங்கியினால் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காத்தான்குடி மாணவனுக்கு கௌரவம்


 அமானா வங்கியினால் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காத்தான்குடி மாணவனுக்கு கௌரவம்


தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காத்தான்குடி மாணவன் MSM பர்தான் அவர்களுக்கு, இலங்கையின் முதற்தர இஸ்லாமிய வங்கியான அமானா வங்கி தனது கௌரவத்தைச் செலுத்தியது.


காத்தான்குடி அமானா வங்கிக் கிளையின் விசேட ஏற்பாட்டில், கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி காத்தான்குடி மத்திய கல்லூரியின் தொழிநுட்ப கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாணவனின் பல்கலைக்கழக கற்றல் செயல்பாடுகளுக்காக மடிக்கணினி (Laptop) வழங்கி வைக்கப்பட்டது.


பாடசாலை அதிபர் AL சப்ரி (SLPS) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமானா வங்கி காத்தான்குடி கிளை முகாமையாளர் சட்டத்தரணி MM சாஹிர் அஹமட், உதவி கிளைமுகமையாளர் HLM அக்ரம், வங்கி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


கிளை முகாமையாளர் தனது உரையில், அமானா வங்கி ஒவ்வொரு வருடமும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்கி வருவதையும், இவ்வாறான விசேட சாதனைகளை வங்கி என்றும் ஊக்குவிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.


KR TV Network

KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி


ජාතික මට්ටමින් ප්‍රථම ස්ථානය දිනූ කාත්තන්කුඩි ශිෂ්‍යයාට අමානා බැංකුවෙන් උපහාර


ජාතික මට්ටමින් ප්‍රථම ස්ථානය දිනා ගනිමින් දස්කම් දැක්වූ කාත්තන්කුඩි හි එම්.එස්.එම්. පර්දාන් ශිෂ්‍යයා වෙනුවෙන් ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම ඉස්ලාමීය බැංකුව වන අමානා බැංකුව සිය උපහාරය පුද කරන ලදී.


අමානා බැංකුවේ කාත්තන්කුඩි ශාඛාව මගින් සංවිධානය කරන ලද මෙම විශේෂ උත්සවය පසුගිය අප්‍රේල් 24 වන දින කාත්තන්කුඩි මධ්‍ය මහා විද්‍යාලයේ තාක්ෂණික ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි. එහිදී එම ශිෂ්‍යයාගේ විශ්වවිද්‍යාල අධ්‍යයන කටයුතු සඳහා ලැප්ටොප් පරිගණකයක් පරිත්‍යාග කරන ලදී.


පාසල් විදුහල්පති ඒ.එල්. සබ්රි (SLPS) මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැති මෙම අවස්ථාවට අමානා බැංකුවේ කාත්තන්කුඩි ශාඛා කළමනාකරු නීතිඥ එම්.එම්. සහීර් අහමඩ්, සහකාර ශාඛා කළමනාකරු එච්.එල්.එම්. අක්‍රම් යන මහත්වරුන් ඇතුළු බැංකු නිලධාරීන්, ගුරුවරුන් සහ සිසුන් පිරිසක් සහභාගී වූහ.


ශාඛා කළමනාකරු සිය දේශනයේදී සඳහන් කළේ අමානා බැංකුව සෑම වසරකම 5 ශ්‍රේණිය ශිෂ්‍යත්ව විභාගයෙන් සමත් වන සිසුන්ට මුදල් ත්‍යාග පිරිනමන බවත්, මෙවැනි සුවිශේෂී ජයග්‍රහණ බැංකුව සැමවිටම දිරිමත් කරන බවත්ය.


KR TV Network

KR TV Lankan Voice

දේශීය පුවත්


Amana Bank Honors Kattankudy Student for National-Level Achievement


Amana Bank, Sri Lanka's premier Islamic bank, recently honored MSM Parthan, a student from Kattankudy who achieved the first rank at the national level.


Specially organized by the Kattankudy branch of Amana Bank, the ceremony took place on April 24th at the Technical Auditorium of Kattankudy Central College. During the event, a laptop was presented to the student to support his university studies.


The ceremony was presided over by the school principal, AL Sabri (SLPS). Notable attendees included the Kattankudy Branch Manager of Amana Bank, Attorney-at-Law MM Sahir Ahmed, Assistant Branch Manager HLM Akram, bank staff, teachers, and students.


In his address, the Branch Manager highlighted that Amana Bank provides cash prizes annually to students who pass the Grade 5 Scholarship Examination and emphasized the bank's ongoing commitment to encouraging such exceptional achievements.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News


B.M.பயாஸ்(ஊடகவியலாளர்)

அமானா வங்கியினால் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காத்தான்குடி மாணவனுக்கு கௌரவம் Reviewed by KR TV LANKAN VOICE on மே 08, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.