Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு விஜயம்

 


தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு விஜயம்


தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று செவ்வாய்கிழமை (12) சென்னை மண்ணடியில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஜிலுக்கு வருகை தந்தார். இதன்போது அவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனை சந்தித்து அவரிடம் வாழ்த்துப் பெற்றார்.


முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முஸ்லிம் லீக் தலைமை நிலையம் சார்பில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தார். பதிலுக்கு முதலமைச்சரும் பேராசிரியருக்கு பொன்னாடை போர்த்தி தனது மரியாதையை வெளிப்படுத்தினார். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் முதலமைச்சருடன் உடனிருந்தனர்.


முன்னதாக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை அவர்களது இல்லங்களில் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடர் சந்திப்புகளின் ஒரு அங்கமாகவே இன்றைய தினம் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.


KR TV Network / KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி



තමිල්නාඩු මහ ඇමති ජෝසප් විජේ ඉන්දීය යූනියන් මුස්ලිම් ලීග් මූලස්ථානයේ සංචාරයක


තමිල්නාඩු මහ ඇමති ජෝසප් විජේ මහතා අද (12) අඟහරුවාදා දින චෙන්නායි හි මන්නඩි ප්‍රදේශයේ පිහිටි ඉන්දීය යූනියන් මුස්ලිම් ලීග් මූලස්ථානය වන කායිදේ මිල්ලත් මන්ජිල් වෙත පැමිණියේය. එහිදී ඔහු ඉන්දීය යූනියන් මුස්ලිම් ලීග් ජාතික සභාපති මහාචාර්ය කේ.එම්. කාදර් මොහිදීන් මහතා හමුවී ආශිර්වාද ලබා ගත්තේය.


මුස්ලිම් ලීග් මූලස්ථානය වෙනුවෙන් මහාචාර්ය කේ.එම්. කාදර් මොහිදීන් මහතා විසින් මහ ඇමතිවරයාට මල් කළඹක් දී උණුසුම් අයුරින් පිළිගනු ලැබීය. මහ ඇමතිවරයා ද මහාචාර්යවරයාට උපහාර පිණිස පොන්නාඩයක් පළඳවන ලදී. මෙම සංචාරය සඳහා අමාත්‍යවරුන් වන බුසී ආනන්ද් සහ ආදව් අර්ජුනා යන මහත්වරුන් ද මහ ඇමතිවරයා සමඟ එක්ව සිටියහ.


මීට පෙර මහ ඇමති ජෝසප් විජේ මහතා හිටපු මහ ඇමති මුතු වේල් කරුණානිධි ස්ටාලින්, වයිකෝ, සීමාන් සහ අන්බුමනි රාමදාස් යන දේශපාලන නායකයන් ද හමුවී ආශිර්වාද ලබාගෙන තිබුණි. එම හමුවීම් මාලාවේ තවත් පියවරක් ලෙස අද දින මුස්ලිම් ලීග් මූලස්ථානය වෙත මෙම සංචාරය සිදු කර ඇත.


KR TV Network / KR TV Lankan Voice

දේශීය පුවත්


Tamil Nadu CM Joseph Vijay Visits Indian Union Muslim League Headquarters


Tamil Nadu Chief Minister Joseph Vijay visited the Quaide Millat Manzil, the headquarters of the Indian Union Muslim League located in Mannady, Chennai, today, Tuesday (12). During his visit, he met with the national president of the league, Professor K.M. Kader Mohideen, and sought his blessings.


Professor K.M. Kader Mohideen welcomed the Chief Minister on behalf of the headquarters by presenting him with a shawl and a bouquet of flowers. In return, Chief Minister Joseph Vijay honored the Professor by draping him with a golden shawl. Ministers Bussy Anand and Aadhav Arjuna also accompanied the Chief Minister during this visit.


This visit follows a series of meetings where Chief Minister Vijay previously met and received blessings from former Chief Minister and DMK President M.K. Stalin, MDMK General Secretary Vaiko, Naam Tamilar Katchi Chief Coordinator Seeman, and PMK President Anbumani Ramadoss at their respective residences.


KR TV Network / KR TV Lankan Voice

Local News

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் Reviewed by KR TV LANKAN VOICE on மே 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.