Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சீரற்ற வானிலை: ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

 


சீரற்ற வானிலை: ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை


மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கடும் மழை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (2026.05.15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் விசேட பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் (கடமை நிறைவேற்றல்) ஆ.சுமதி அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாளைய தினமும் (சனிக்கிழமை) ஆசிரியர்களையோ அல்லது மாணவர்களையோ கல்வி சாரா ஏனைய விடயங்களுக்காகப் பாடசாலைகளுக்கு அழைப்பதையும் தவிர்க்குமாறு அவர் அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


கே ஆர் டிவி நெட்வொர்க்

KR TV லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


අයහපත් කාලගුණය: හැටන් අධ්‍යාපන කලාපයේ සියලුම පාසල්වලට අද නිවාඩු


මධ්‍යම පළාතේ පවතින අයහපත් කාලගුණික තත්ත්වය සහ අධික වර්ෂාව හේතුවෙන් හැටන් අධ්‍යාපන කලාපයට අයත් සියලුම පාසල් සඳහා අද දින (2026.05.15) නිවාඩු ලබා දී ඇත. මධ්‍යම පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂවරයාගේ විශේෂ උපදෙස් පරිදි මෙම පියවර ගෙන තිබේ.


හැටන් කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂ (වැඩබලන) ආර්. සුමති මහත්මිය පවසා සිටියේ සිසුන්ගේ ආරක්ෂාව සලකා මෙම තීරණය ගත් බවයි. තවද, හෙට (සෙනසුරාදා) දිනයේදී ද අධ්‍යයන හෝ වෙනත් කටයුතු සඳහා ගුරුවරුන් හෝ සිසුන් පාසල් වෙත කැඳවීමෙන් වළකින ලෙස ඇය විදුහල්පතිවරුන්ට දන්වා සිටියි.


කේ ආර් ටී වී නෙට්වොර්ක්

KR TV ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Adverse Weather: Holiday Declared for All Schools in Hatton Education Zone Today


Due to the prevailing adverse weather conditions and heavy rainfall in the Central Province, a holiday has been declared for all schools within the Hatton Education Zone today (2026.05.15). This directive was issued following instructions from the Central Provincial Director of Education.


Zonal Education Director (Acting) R. Sumathy stated that this decision was taken to ensure the safety of students. Furthermore, she has instructed principals to refrain from calling teachers or students to schools for any extra-curricular or other activities tomorrow (Saturday) as well.


KR TV Network

KR TV Lankan Voice

Local News

சீரற்ற வானிலை: ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை Reviewed by KR TV LANKAN VOICE on மே 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.