குருநாகல் பிரதி மேயர் அஷர்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்
குருநாகல் பிரதி மேயர் அஷர்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று (08) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட குருநாகல் பிரதி மேயர் அஷர்தீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) உறுப்புரிமையிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீனின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அரசியலமைப்பு மற்றும் சட்ட விவகார பணிப்பாளரான சிரேஷ்ட சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.
இந்த இடைநிறுத்தம் தொடர்பான பின்னணி விபரங்கள்:
* கைதுக்கான காரணம்: டெண்டர் ஒன்றை வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 3 மில்லியன் ரூபாவினை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.
* கைது செய்யப்பட்ட இடம்: பத்தரமுல்லையில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
* அரசியல் பின்னணி: குருநாகல் மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததன் மூலம் அஷர்தீன் பிரதி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
කුරුණෑගල නියෝජ්ය නගරාධිපති අෂාර්ඩීන් සමස්ත ලංකා මහජන කොංග්රසයෙන් වැඩ තහනමට ලක් කෙරේ
අල්ලස් හෝ දූෂණ විමර්ශන කොමිෂන් සභාව මගින් ඊයේ (08) අත්අඩංගුවට ගත් කුරුණෑගල නියෝජ්ය නගරාධිපති අෂාර්ඩීන් මහතාගේ සමස්ත ලංකා මහජන කොංග්රස් පක්ෂ සාමාජිකත්වය වහාම ක්රියාත්මක වන පරිදි අත්හිටුවා ඇත. පක්ෂ නායක රිෂාඩ් බදියුඩීන් මහතාගේ උපදෙස් පරිදි මෙම පියවර ගත් බව එම පක්ෂයේ ව්යවස්ථාපිත හා නීති කටයුතු අධ්යක්ෂ ජ්යෙෂ්ඨ නීතිඥ රුස්ති හබීබ් මහතා තහවුරු කළේය.
සිද්ධියට අදාළ පසුබිම:
* අත්අඩංගුවට පත්වීමට හේතුව: ටෙන්ඩරයක් ලබාදීම සඳහා ව්යාපාරිකයෙකුගෙන් රුපියල් මිලියන 3ක අල්ලසක් ලබාගැනීමේ චෝදනාව මත මොහු අත්අඩංගුවට පත් විය.
* අත්අඩංගුවට ගත් ස්ථානය: බත්තරමුල්ල ප්රදේශයේ හෝටලයකදී අදාළ මුදල ලබාගනිමින් සිටියදී මොහු අත්අඩංගුවට පත්ව තිබේ.
* දේශපාලන පසුබිම: කුරුණෑගල මහ නගර සභාවේ බලය පිහිටුවීම සඳහා පාලක ජාතික ජන බලවේගයට සහය ලබාදීමෙන් අනතුරුව අෂාර්ඩීන් මහතා නියෝජ්ය නගරාධිපති ධූරයට තේරී පත් විය.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
Kurunegala Deputy Mayor Azardeen Suspended from All Ceylon Makkal Congress
Kurunegala Deputy Mayor Azardeen, who was arrested on Friday (08) by the Bribery Commission, has been suspended from the membership of the All Ceylon Makkal Congress (ACMC). Senior Lawyer Rusti Habib, the party's Director of Constitutional and Legal Affairs, stated that the suspension was carried out under the instructions of party leader Rishad Bathiudeen.
Background of the suspension:
* Reason for Arrest: Azardeen was arrested on charges of accepting a bribe of Rs. 3 million from a businessman in exchange for awarding a tender.
* Place of Arrest: He was apprehended by officials of the Bribery Commission at a hotel in Battaramulla while accepting the bribe.
* Political Context: Azardeen was elected as the Deputy Mayor of the Kurunegala Municipal Council after supporting the ruling National People's Power to gain control of the council.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 09, 2026
Rating:

கருத்துகள் இல்லை: