Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ANN ஏற்பாட்டினில் ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரனங்கள் மற்றும் அப்பியாசக்கொப்பிகளை வழங்கும் செயற்திட்டம்


-ஹிஷாம் இப்றாஹீம்-

"கற்பவருக்கு உதவி புரிபவனாக இரு" என்கின்ற நபிமொழியின் அடிப்படையில் ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரனங்கள் மற்றும் அப்பியாசக்கொப்பிகளை வழங்கும் செயற்திட்டம் ஒன்றினை எமது ANN ஊடக குழுமத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தமது ஏழ்மை நிலையினை வெளியில் சொல்லி இரந்து கேட்க தயங்கும் நிலையிலுள்ள பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவும் அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி இன்னும் இயல்பு வாழ்க்கை க்கு திரும்பாத குடும்பங்களிலுள்ள  பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்கின்ற உயரிய சிந்தனையுடனும் நாம் இந்த திட்டத்தை மேற்கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க தனவந்தர்கள் சமுகஉணர்வு கொண்ட சகோதரர்களிடம் இருந்து நிதியுதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது. அல்லாஹ்வுக்காக என்கின்ற தூய்மையான எண்ணத்துடன் எங்களது இந்த திட்டத்திற்கு பங்களிப்பு செய்து ஏழை மாணவர்களின் துயர் துடைக்கின்ற போது இம்மையிலும் மறுமையிலும் அதற்கான நிரப்பமான கூலிகள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
எனவே எமது எதிர்கால சந்ததியின் கல்வி நடவடிக்கைகள் தடைபடுவதற்கு வறுமை ஒரு காரணமாக இருக்க கூடாது எனக்கருதி தங்களது பங்களிப்பை எம்மிடம் உறுதிப்படுத்துங்கள். 
ஜஸாக்குமுல்லாஹு ஹைறன்.

தொடர்புகளுக்கு:
Naazir Nazar 0752681996
Hizam Ibrahim 0771119373
Arsath Gafoor 0763608022

"கற்பவனாக இரு, கற்றுக் கொடுப்பவனாக இரு , கற்பபவனுக்கு உதவுபவனாக இரு. நான்காமவனாக இருந்து விடாதே" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.         

Bank Of Ceylon
Kattankudy 
Aim.Hizam
A/c No: 81904047
ANN ஏற்பாட்டினில் ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரனங்கள் மற்றும் அப்பியாசக்கொப்பிகளை வழங்கும் செயற்திட்டம் Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 15, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.