மருத்துவ தவறுகளுக்கு குற்றப் பரிகாரம் உண்டா......?
அண்மையில் மட்டக்களப்பு காங்கயனோடையைச் சேர்ந்த மாணவி ஒருவரின் மரணம் வைத்திய துறை சார்ந்தவர்களின் அசமந்தபோக்கினால் நடந்துள்ளது என்பதை வைத்தியசாலை வட்டாரங்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரின் அடுத்த கட்ட நடவடிக்கை நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பான ஒரு விழிப்புணர்வுக்காக இப்பதிவு இடப்படுகிறது..
மருத்துவ துறை புனிதமானது இருப்பினும் மனித உயிர்கள் மிகவும் பெறுமதியானவை. ஒரு வைத்தியர் கையில் கத்தி இருப்பதற்கும் ஒரு கொலைகாரன் கையில் கத்தி இருப்பதற்கும் இடையில் ஒற்றுமை கத்தியாக இருப்பினும் நோக்கங்கள் நேரேதிராக இருக்கிறது.
மருத்துவ துறையில் எமது மாவட்டத்தில் நடந்த அண்மைய சம்பவங்கள் இளவயதினரின் மரணங்கள் மக்கள் மத்தியில் மருத்துவ துறையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் மருத்துவ துறையில் ஏற்படுகின்ற இவ்வாறான சம்பவங்களை சட்டம் "மருத்துவ தவறு" (medical negligence) என்று குறிப்பிடுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மருத்துவ துறையில் புதிய விடயமல்ல. இருப்பினும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் சட்டம் சொல்லும் செய்தி என்ன என்பது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுவதே பிரதான நோக்காகவுள்ளது.
மருத்துவ தவறு என்பது மருத்துவ துறை சார்ந்தவர்களால் நோயாளிகளுக்கு ஏற்படும் கவனக்குறைவு ஆகும் இதை ஆங்கிலத்தில் (breache of duty) என்று அழைப்பர். எனவே இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களால் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறுகள் இருக்கிறது.
"மருத்துவ தவறு" எனும் விடயம் மருத்துவ முறைகேடு என்றும் அழைக்கப்படுகிறது (professional negligence) தொழில் ரீதியான தவறினால் ஏற்பட்ட இழப்புக்கு தண்டனை அல்லது பரிகாரம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக சட்டத்தில் இவ்வாறான இழப்பீடுகள் தொடர்பான வழக்குகள் சிவில் வழக்குகளாகும். delict (tort) தீங்கியல் சட்டத்தின் கீழ் இவ்வழக்குகள் கையாளப்படுகிறது.
தீங்கியல் சட்டத்தில் 1984ம் ஆண்டுக்குப் பின்னர் "duty of care" இனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை அணுகுவதற்கு வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. பல வழக்குகளை ஆராய்ந்து பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகிறது. (1)
1. பொதுக் கோட்பாட்டின் படி மூன்று படிநிலைகளில் பரீட்சிக்கப்படுகிறது. உ+ம் : பலவந்தமான ஆக்கப்பட்ட தீங்கு
2. அணுகுமுறைகளின் வகை
உ+ம்: கடமையின் வரையறை
3.கூடுதல் முறையான அணுகுமுறை
உ+ம் : கடமை மீறல் அல்லது கடமை குறைவு ஏற்பட்ட சந்தர்ப்பம்
4. நீதி முறை அணுகுமுறை
உ+ம்:பாதிக்கப்பட்டவரின் இழப்புக்கான இழப்பீட்டை உறுதிப்படுத்துதல்.
மருத்துவ தவறுக்கான வழக்கொன்றில்
ஒரு வழக்காளி தனது எதிராளிக்கு எதிராக வழக்காட முன்னர் மருத்துவ தவறொன்றின் மூலம் எழுந்த வழக்கெழு காரணியை (cause of action) யை கண்டறிய வேண்டும்.
இவ்வாறான வழக்குகளில் பின்வரும் மூன்று விடயங்கள் நீதிமன்றத்தினால் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
1. A Duty of care - பாதுகாப்பு கடமை
(இதில் கடமை இல்லை என்றால் வழக்கு இல்லை )
2. A breach of duty - கடமை குறைபாடு
(இதில் கடமை குறைபாடு இல்லை எனில் வழக்கு இல்லை)
3. Causation of damage - பாதிப்புக்கான காரணம்
(இதில் பாதிப்பு இல்லை எனில் வழக்கு இல்லை )
மேற்கூறப்பட்ட மூன்று படிநிலைகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு நீதிமன்றம் பாதிக்கப்பட்ட வழக்காளிக்கான தீர்வினை வழங்கும். (2)
(Priyani soyza vs Arsekularatne) பிரியானி சொய்சா எதிர் அரசகுலரத்ன எனும் வழக்கு இலங்கையில் நடந்த மருத்துவ தவறுக்கான பிரபலமான வழக்காகும். (3)
இவ்வழக்கில் வழக்காளி 4 வயது பிள்ளையின் தந்தை. எதிராளி ஒரு பிரசித்திபெற்ற குழந்தை மருத்துவர். தனது பிள்ளைக்கு வைத்தியரின் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு நீதிகோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
குறிப்பிட்ட குழந்தை மருத்துவரின் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட மருத்துவ தவறே தனது குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்று வழக்காளியின் வாதம் அமைந்தது.
வழக்காளியின் குற்றச்சாட்டு எதிராளியின் முழுமையான கவனக்குறைவால் ஏற்பட்டது என சுட்டிக்காட்டினர்.
ஒரு குழந்தை மருத்துவராக தனது கடமையை சரியாக செய்யவில்லை என்பதே வழக்காளியின் பிரதான குற்றச்சாட்டாகும்.
இக்குற்றச்சாட்டுகளை சரிகண்ட மாவட்ட நீதிமன்றம் விசாரணையின் பின்னர் ரூபாய் 5,000,000/= வழக்காளிக்கு இழப்பீடாக வழங்க கட்டளையிட்டது.
இருப்பினும் இவ்வழக்கு மேல்முறையீடுக்கு செல்ல மேல் மேல் முறையீட்டு நீதிமன்று வழக்காளியின் குற்றச்சாட்டினை அங்கீகரித்து மாவட்ட நீதிமன்ற தீர்ப்பினை சரிகண்ட போதிலும் இழப்பீடு தொகையை குறைத்து 250,000/= என்ற மருத்துவ செலவினை மாத்திரமே வழங்குமாறும் பணித்தது.
ஆயினும் இவ்வழக்கு வழக்காளியினால் உயர் நீதிமன்றத்திற்கு செல்ல உயர் நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்பினை வழங்கி கீழ் நிலை நீதிமன்றங்களின் தீர்பினை புறந்தள்ளியது. (overrule)
வழக்காளி தனது வழக்கில் சமநிலை தண்மையை (balance of probability ) நிரூபிக்க தவறியமையினாலும் குழந்தையின் மரணத்திற்கு வைத்தியரின் தவறு மாத்திரம் காரணமில்லை என்றும் வழக்காளிக்கு சொத்துமுறை நஷ்டம் ( patrimonial loss) மாத்திரமே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. (4)
ஒரு மருத்துவ தவறு கொலைக்குற்றமாகாது. ஆனால் அத்தவறுக்காக பாதிக்கப்பட்ட தரப்புக்கு இழப்பீடு அவசியமாகிறது. உதாரணமாக ஒரு வாகன சாரதி வீதி சமிக்கைகளை மீறி வாகனத்தினை செலுத்தி விபத்தோன்று நடக்கும்போது அந்த சாரதிக்கு பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடு வழங்க பணிக்கப்படுகிறது.
எனவே இதேபோல்தான் தொழில் முறை மருத்துவ தவறுக்கும் "இழப்பீடு" ஒன்றே குற்றப்பரிகாரமாகும்..
எனவே மாணவி ஜப்றாவின் விடயத்தில் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்கு இடமாற்றம், தற்காலிக வேலை நீக்கம் என்பன பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்காது.
இருப்பினும் சிவில் வழக்கொன்றின் மூலமான நஷ்டஈடு தீர்வு என்பது பாதிக்கப்பட்ட அந்த ஏழை குடும்பத்துக்கு சற்று ஆறுதலாக அமையலாம்.
அது மாத்திரமின்றி எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் மருத்துவ துறையில் நடக்காமல் இருக்க ஏதுவாக அமையலாம்.
- முற்றும்-
மூலாதாரங்கள்:
1. A modern treaties on the law of delict ( TORT)
Dr.U.L. Abdul majeed
2. Priyani soyza vs Rienzie Arasacularatne 2001 (2) sri l.r 293
3.https://www.alllaw.com › nolo › neg...
Web results
Medical Negligence: The Law Explained | AllLaw
மருத்துவ தவறுகளுக்கு குற்றப் பரிகாரம் உண்டா......?
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 15, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 15, 2019
Rating:

கருத்துகள் இல்லை: