Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

"முன்பிணை" அல்லது "முன்ஜாமீன்" குற்றச்சாட்டுக்குள்ளானவரை திடீரென கைது செய்டவதில் இருந்து தடுக்குமா.......?


ஏ.ஆர்.மபூஸ்அஹமட்
LL.B(Hon)

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 
வெள்ளை வேன் சாரதிகளின் ஊடகவியளாலர்கள் சந்திப்பை நடாத்த திட்டமிட்டார் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ள முன்னால் அமைச்சர் ராஜித சேனாரத்ன அக்குற்றச்சாட்டின் மூலமாக தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனக் கருதி  முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அக்கோரிக்கையில் உள்ள  குறைபாடுகள் கருதி இரண்டாவது முறையாகலும் மனு நிராகரிக்கப்பட்டு மூன்றாவது கோரிக்கை எதிர்வரும் 30ம் திகதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது..

(இப்பதிவு இடும்போது அவரை கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் போலீஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்)

இந்நிலையில் "முன்பிணை " என்றால் என்ன? இதற்காக இவ்வாறான பிணைமுறை உள்ளது என்பது பற்றி முகநூல் பாவனையாளர்களான நீங்களும் அறிந்திருப்பது அவசியம்.

பகிரங்கமாக கொலைசெய்த அல்லது  கொள்ளையில் ஈடுபட்ட நபர்  ஒருவர்  கைதில் இருந்து தான்  தப்பிக்க முன்பிணை கோர முடியாது. ஆனால் சந்தேகிக்கப்படும் நபர் தான்  அக்குற்றச்சாட்டில் நிரபராதி எனக்கருதினால்,  சந்தேகிக்கப்பட்டு கைதாகினால் தனது நற்பெயருக்கு கலக்கம் ஏற்படும் என்ற வலுவான நம்பிக்கையின் அடிப்படையில் முன்பிணை மனுக்கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைக்கலாம்.

திடீர் கைதின் மூலம் பிரபலங்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிடும் மற்றும் திடீர் கைது தான் நிரபராதி என்று நிரூபிக்கும் தனது நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் என்று மனுதாரர் கருதலாம். இருப்பினும்  அக்குற்றச்சாட்டுக்கு சாதாரணமாக பிணை வழங்கக்கூடிய அதிகாரம் நியாயாதிக்கம் இருக்கிறதா என்பது பற்றியும், மனுதாரரால் சாட்சிகளுக்கு ஏதாவது அச்சுறுத்தல் அல்லது பாதகம் ஏற்படுமா என்பது பற்றியும் நீதிமன்றம் கவனமெடுக்கும்.

1997ம் ஆண்டின் 30ம் இலக்க பிணைகள் 
சட்டத்தின் பிரிவு 21இன் மூலமே இந்த முன்பிணை இலங்கையில் முதன்முறையாக கொண்டுவரப்பட்டது. இந்திய முன்பிணை சட்டத்தை தழுவிய ஒரு சட்டமாகவே இது கானப்படுகிறது.

பிணைகள் சட்டத்தின் 21வது பிரிவு இந்த முன்பிணை பற்றிய ஏற்பாடுகளை கொண்டுள்ளது..

ஆளொருவர் அவர் தொடர்பு பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு  ஒன்றிற்காக சந்தேகிக்கப்படுகின்றபோது குற்றம் நடந்துள்ள எல்லைக்குள் அமைந்துள்ள நீதவான் நீதிமன்றத்திற்கு போலீசார் தன்னை எந்நேரமும்  கைது செய்யலாம் என்று நம்பிக்கை ஏற்படுமிடத்து  இந்த முன்பிணை விண்ணப்பத்தை செய்யலாம். 
இவ்வாறான முன்பிணை விண்ணப்பத்தை செய்யும் போது குறிப்பிட்ட பிரதேச போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் அனுப்பப்படுதல் வேண்டும்.

எனினும் முன்பிணை விண்ணப்பம் ஒன்றில்  பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகிறது 

01. குற்றச்சாட்டு ஒன்றிற்காக சந்தேகிக்கப்படுகின்ற நபர் ஒருவர் தான் தான் அக்குற்றச்சாட்டின் மூலமாக தான் எந்நேரமும் கைது செய்யப்பட்டலாம் என்று திடமாக நம்புதல் வேண்டும். 

02. புரியப்பட்ட குற்றச்செயல் பிணைவழங்க முடியாத குற்றமாக இருக்க வேண்டும் 

03. சந்தேக நபர் சட்டத்தரணி மூலமாக உரிய நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை விண்ணப்பத்தை செய்யவேண்டும் 

04. இவ்வாறு விண்ணப்பம் ஒன்று செய்கின்றபோது உரிய போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் அனுப்புதல் வேண்டும் 

05. முன்பிணை விண்ணப்பத்துடன் சத்திய ஒலை இணைக்கப்படல் வேண்டும்.

பிணைச்சட்டத்தின் கீழ் 
இவ்வாறான  முழுமையான விண்ணப்பம் ஒன்றினை பெற்ற நீதிமன்றம் அது தொடர்பில் ஏழு நாள்களுக்குள் விசாரணை ஒன்றை குறிப்பிட்ட போலீஸ் பொறுப்பதிகாரியுடன் மேற்கொள்ள வேண்டும்  என பிரிவு 21(3) குறிப்பிடுகிறது. (1)

குறித்த விசாரணையின் பின்னர் நீதவான் விண்ணப்பத்தை அனுமதித்து அந்த நபருக்கு முன்பிணை வழங்க முடியும். இருப்பினும் குறைபாடுகள் இருப்பின் அதனை நிராகரிக்கவும் முடியும்.

இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பம் ஒன்றுக்கு நீதவான் சில நிபந்தனைகளை விதிக்க முடியும். உதாரணமாக முன்பிணைக்கு விண்ணப்பித்த நபரின் வெளிநாட்டு பயனங்களை கட்டுப்படுத்தி கடவுச்சீட்டினை நீதிமன்றம் பாதுகாப்பில் வைக்க கட்டளை இடலாம்.

- தொடரும்-

மூலாதாரங்கள்: 
1. பிணையா விளக்க மறியலா
எம்.பி.முகைதீன்- மாவட்ட நீதிபதி 

2. பிணைச் சட்டம் 
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு

3. 1997 ஆம் ஆண்டு  30ம் இலக்க பிணைச்சட்டம்
"முன்பிணை" அல்லது "முன்ஜாமீன்" குற்றச்சாட்டுக்குள்ளானவரை திடீரென கைது செய்டவதில் இருந்து தடுக்குமா.......? Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 26, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.