ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி
நத்தார் வாழ்த்துச் செய்தி சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடைந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தாரின் உண்மையான அர்த்தமாகும். இதற்காக எம்மை பற்றியுள்ள சகல தீய எண்ணங்களையும் களைந்து, அன்பு, கருணை, மனித நேயம் ஆகியவற்றால் எமது மனங்களை நிரப்பிக்கொள்வோம். பாவத்திலிருந்து மீண்ட இயேசு பிரான் சகல மக்களுக்கும் காட்டிய ஆன்மீக வழியை நாமும் பின்பற்றுவோம். அதுவே நித்திய வாழ்விற்கான வழியாகும் என்றே கிறிஸ்தவம் போதிக்கின்றது.
'நல்ல உள்ளங்கள் அமைதியடையட்டும்' என்பதையே இக்காலத்தில் இசைக்கப்படும் இறை கானங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அத்தகைய தூய உள்ளங்களைக் கொண்ட ஒரு சமூகமே எமது எதிர்பார்ப்பாகும். ஆண்டவரின் ஆசிர்வாதமும் விருப்பமும் அதுவேயாகும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்வோம். இறை ஆசிர்வாதம் பெற்ற வணக்கஸ்தலங்களில் அண்மையில் முகங்கொடுக்க நேர்ந்த துன்பியல் சம்பவங்கள் மீண்டுமொருமுறை இடம்பெறாதிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
பிறந்துள்ள இந்த நத்தாரை அச்சமும் சந்தேகமுமின்றி நிம்மதியாக கொண்டாடுவதற்கான சூழல் தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே கருணை உள்ளம் கொண்ட அனைவரதும் பிரார்த்தனையாக அமைந்த அதேவேளை, மிகுந்த துயரத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான மக்களுக்கு நிம்மதியையும் பெற்றுத்தரும். இயேசு பிரான் தனது போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு சகல மக்களையும் சமமாக மதித்து போற்றும் உயரிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக இந்த உன்னத நத்தார் தினத்தில் நாம் அனைவரும் மீண்டும் திடசங்கற்பம் பூணுவோம்.
மன்னிப்பு, மனிதநேயம், அன்பு போன்ற மகத்தான பண்புகள் பற்றிய இயேசு பிரானின் போதனைகள் நாற்திசைகளிலும் எதிரொலிக்கட்டும். இலங்கைவாழ் கிறிஸ்தவ மக்களுக்கும் உலகெங்கும் பரந்துவாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சுபீட்சமான நத்தார் உதயமாகட்டும். இனிய நத்தார் வாழ்த்துகள்.
නත්තලේ සැබෑ අර්ථය අපගේ ජීවිත ආලෝකවත් කර ගැනීමයි. ඒ සඳහා ජීවිත ආවර්ජනයෙන් පාපී සිතුවිලි සම්පූර්ණයෙන් බැහැර කොට ප්රේමයෙන් හා දයාවෙන් හදවත් පුරවා ගත යුතුය. ජේසු සමිඳාණන් සකල ලෝකවාසීන්ට පෙන්වා දුන් අධ්යාත්මයේ මග අප හෙළි පෙහෙළි කරගත යුතුය. එය සදාතනික ජීවිතය ද වන බව කිතු දහමෙන් අර්ථ ගන්වයි.
දේව දූත ගීතිකා හඬ අපට කියන්නේ "සුසිත් දනන් හට සාමය උදා වේවා" යන්නය. අපගේ ප්රාර්ථනය ද කැපවීම ද එවන් වූ සුසිත් දනන් පිරි සමාජයකි. දෙව්පියාණන්ගේ ආශිර්වාදය ද, කැමැත්ත ද එයම බව අපි දැඩිව විශ්වාස කරමු. එසේම දේවාශිර්වාදය ලැබූ පුදබිම් පසුගිය කාලයේ විඳි වේදනාත්මක අත්දැකීම නැවත අත් නොවිඳිමට අප වග බලා ගත යුතුය. උදාවූ නත්තල බියෙන් සැකෙන් තොරව සැමරීමට අවශ්ය පරිසරය රට තුළ දැන් ගොඩනැඟී තිබේ. එය කරුණාබර හදවත් ඇති සියලූ මනුෂ්යයන්ගේ ප්රාර්ථනය ඉටු වීමක් සේම දැඩි වේදනාවටත්, කම්පනයටත් පත් සියලූ හදවත්වලට සැනසුමක් උදා කරවයි. ජේසු සමිඳාණන් දේශනා කළ පරිදි සියලූ මනුෂ්යයනට සමව සලකන කුළුණුබර සමාජයක් නිර්මාණය කිරීමට මේ උතුම් නත්තල් දිනයෙහි අපි නැවත අධිෂ්ඨාන කර ගනිමු.
උන්වහන්සේගේ දහමෙන් පෝෂණය වූ සමාව දීම, මනුෂ්යත්වය, ආදරය ආදී වූ උත්තුංග සදූපදේශයන්ගේ ශුභාරංචිය ගම්දනව් සිසාරා පැතිර ලක්වාසී සියලුම කිතුනු ජනතාවටත්, ලෝකවාසී සැමටත් සෞභාග්යමත් නත්තලක් වේවා යි ප්රාර්ථනය කරමි.
The dawn of Christmas brings immense joy to all, awakening the hearts of devotees of the noble religion of Jesus Christ, which brought the message of peace and harmony to the world.
The real meaning of Christmas is to make our lives meaningful. For that, we need to fill our hearts with love and compassion while completely eliminating sinful thoughts. We must uncover the path of spirituality shown by the Jesus to the whole world by getting rid of all wrongdoings. Christianity interprets it as the eternal life.
The sound of hymns tells us ‘peace be upon pious individuals’. Our aspiration and commitment is to usher in a society with virtuous humans. We strongly believe that the desire and the blessings of the God is also for the same objective. We should take steps to
prevent recurrence of mournful experiences occurred at the sacred places of worship in the recent past. At present there is an environment in the country where citizens can celebrate Christmas without fearful thoughts and suspicion. It is the aspiration of all kind-hearted persons which became a reality, and it will provide relief for the hearts which were deeply saddened and shaken. Let us again dedicate ourselves with determination to create a better society where all the human beings will be treated equally, the way Jesus Christ taught us.
I wish all Christians in Sri Lanka and around the world a merry Christmas filled with joy and prosperity where Jesus' teachings of forgiveness, humanity and love spread across the country.
#MerryChristmas #GotabayaRajapaksa
ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 25, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 25, 2019
Rating:

கருத்துகள் இல்லை: