காத்தான்குடி மாணவர்கள் சர்வதேச ரீதியாக சாதனை.
Aristo Kids நிறுவனத்தினால் இந்தியாவின் பூனே நகரில் 15.12.2019 அன்று சர்வதேச ரீதியாக நடைபெற்ற சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய Abacus Maths போட்டியில் காத்தான் குடியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதலாம் இடத்தையும் ஒரு மாணவி 2ம்இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
குறித்த மாணவர்களில் புதிய காதான்குடி-01, பதுறியா வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி பயிலும் முஹம்மட் ஷாமில் அகாஸ் முஹம்மட் என்கின்ற மாணவனே Juniour Level பிரிவில் 1வது இடத்தையும், மீராபாலிகா வித்தியாலயம் தரம் 2யில் கல்வி பயிலும் முஹம்மட் ஹனீஸ் அய்யாஷ் என்கின்ற மாணவன் Super Juniour Level பிரிவில் 1வது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். மேலும் மீராபாலிகா வித்தியாலயத்தில் தரம் 6 யில் கல்வி கற்கும் முஹம்மது ஹனீஸ் பாத்திமா ஹீனா என்கின்ற மாணவி Juniour Level 2 பிரிவில் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
அண்மையில் இடம் பெற்ற 5வது தேசிய மட்ட ( ICAM )International Concept of Abacus Maths போட்டியில் Junior பிரிவு போட்டிகளில் குறித்த இரண்டு மாணவர்களும் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக் .கொண்டமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடியில் இயங்கிவரும் Amana Kids College ஊடாகவே மேற்படி சர்வதேச போட்டி நிகழ்ச்சிகளுக்காக மாணவர்கள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம் மாணவர்களை சிறப்பாக தயார்படுத்திய Amana Kids College யின் Abacus பிரிவையும், ஆசிரியர்களையும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுகிறோம்.
காத்தான்குடி மாணவர்கள் சர்வதேச ரீதியாக சாதனை.
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 16, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 16, 2019
Rating:






கருத்துகள் இல்லை: