Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

யாப்பு திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தயார் !



ஐக்கிய தேசிய கட்சியின் கட்சி யாப்பை திருத்துவது தொடர்பாக தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது கவனத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய கட்சித் தலைவரின் அதிகாரங்கள், நடைமுறைகள் மற்றும் பதவிக்காலம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய கவனம் செலுத்தப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக தனக்கு அறிவிக்குமாறு தனது கட்சியின் சட்ட பிரிவுக்கு ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தற்போதுள்ள யாப்பின்  படி, தலைவர் தேர்ந்தேடுக்கப்படுவது ஆறு வருட காலத்திற்கே, தலைவர் நியமிக்கப்பட்ட பின்பு அவர் ராஜினாமா செய்யாமல்  நீக்க கட்சி யாப்பில் எந்த ஏற்பாடும் இல்லை.
இந்த நிலைமைகள் குறித்து கருத்தில் கொண்டு கட்சியின் யாப்பை திருத்தம் செய்யவும், மூத்தவர்களின் ஒப்புதல் பெறவும் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஐக்கிய தேசியக் கட்சியிற்குள் தலைமைத்துவம் தொடர்பாக  நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே நிலவும் இந்த பிரச்சினை விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்பதும் கட்சித் உறுப்பினர்களினதும் கட்சி ஆதரவாளர்களினதும் கருத்தாகும்.
எவ்வாறாயினும் இந்த கருத்தியல் பிரச்சினைகளை தீர்க்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதுடன் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக  சிலர்  அவரை தலைவராக நியமிக்க அந்த குழுவுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Sor.l/n
யாப்பு திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தயார் ! Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 16, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.