Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தலைமைத்துவ மாற்றத்தை பற்றி பேச 2022-23 வரை இருங்கள் - ரணில்

2025 பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு 2022-2023 வருடங்களுக்குள் கிடைக்கக்கூடும் எனவும் அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (16) சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஐ தே க எம்பிக்கள் குழுவின் கூட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (17)கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

"நான் எல்லா சம்பவங்களையும் 14 பக்கங்களை பதிவு செய்துள்ளேன். எங்கள் தலைவர் கூறினார் கடந்த முறை 33 பேர் கதைத்தார்கள், அவருக்கு சிலர் தொலைபேசியில் கதைத்தார்கள், 95% மானவர்கள் கூறியது   தயவுசெய்து இந்த நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். தேவைப்பட்டால் சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரியவை இணைத்துக்கொள்ளுங்கள், ஆனால் இந்த தலைமையை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள்.  

2025ல்  தேர்தலில் அவர் போட்டியிடமாட்டார் என்பதால், 2022-23 ஆண்டுகளில் தலைமைத்துவத்தில் மாற்றம் தொடர்பாக கலந்துரையாட வாய்ப்பு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு வாக்குகளை அகற்றினால் UNP  கணிசமான சரிவை சந்தித்திருக்கும். எனவே, பெரும்பாலான மாவட்டங்களில் 40% பெற முடியவில்லை. எனவே அதிகபட்ச எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுவதற்கான எங்கள் இலக்கை வைத்திருக்க விரும்புகிறோம். இதனால்தான் அவரது தலைமையின் கீழ் இந்த பணியை நாம் முன்னெடுக்க வேண்டும், ” என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த கருத்துக்கு எதிராக ரஞ்சித் மத்தும பண்டார, ஹரின் பிரணாந்து, சுஜீவ சேனசிங்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்த போதும் தனது தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க  முடிவில் உறுதியாக இருப்பதாகவும், ஹர்ஷ த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

தலைமைத்துவ மாற்றத்தை பற்றி பேச 2022-23 வரை இருங்கள் - ரணில் Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 20, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.