Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மருதம் கலைக்கூடலின் ஆறாண்டு நிறைவு விழாவும் துறைசார் பிரமுகர்கள் கௌரவிப்பு நிகழ்வும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 6 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (18) சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் மாலை 03.00 மணிக்கு நடைபெறும்.

மன்றத்தின் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

கைத்தொழில் அபிவிருத்திஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவர் டாக்டர் ஏ.உதுமாலெப்பைகல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான்கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தஉலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்காரைதீவு பிரதேச சபை பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீர்சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எச். அஹமத் அம்ஜத்சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபீக்காடொப் குயின் அட்வடைசிங் உரிமையாளர் எம்.எச்.எம். அலி ரஜாய் உள்ளிட்டோர் விசேட அதிதிகளாகவும் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத்இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகவும் கலந்து கொள்வர்.

இந்நிகழ்வில்சமூகசேவைகல்விகலைகலாசாரஇலக்கியத் துறைகளுக்கு ஆற்றி வருகின்ற சேவைக்காக துறைசார் பிரமுகர்கள் மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது’ வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மன்றத்தின் செயலாளர் எம்.ஏ.சி.எம்.பாயிஸ் கரீம் தெரிவித்தார்.

மன்றத்தின் பிரதித் தலைவரும் ஆசிரியரும் அறிவிப்பாளருமான ஏ.எல். நயீம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

மருதம் கலைக்கூடலின் ஆறாண்டு நிறைவு விழாவும் துறைசார் பிரமுகர்கள் கௌரவிப்பு நிகழ்வும் Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 18, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.