இது உண்மையில் அசாதாரணமான ஓர் அரிய அரசியல் நிகழ்வாகும்
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் - பொருளாதார வல்லரசுகளாகவும் உலகப் பெரும் சக்திகளாகவும் திகழும் நான்கு நாடுகளின் அதி உயர் மட்ட ராஜதந்திரிகள் நம் நாட்டிற்கு அதிகாரபூர்வமாக வருகை தந்திருக்கின்றனர்.
அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஶ்ரீமதி. அலிஸ் வெல்ஸ், சீன வெளியுறவு அமைச்சர் திரு. வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் திரு. செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் திரு. கோசோ யமமோட்டோ ஆகியோரை இன்று சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
“சரிந்திருக்கும் எமது நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே சனாதிபதியாக எனது பொறுப்புக் காலத்தின் தலையாய குறிக்கோள்” என்று நான் அவர்களிடம் தெளிவுபடுத்தினேன்.
எமது அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டிய அவர்கள், பொருளாதார மீழெழுச்சி மற்றும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது உட்பட்ட ஒவ்வொரு துறையிலும் நாம் உடனடி வளர்ச்சியை அடைவதற்குத் தங்களின் உச்சபட்ச ஆதரவைத் தருவதாக உறுதியளித்தனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது உண்மையில் அசாதாரணமான ஓர் அரிய அரசியல் நிகழ்வாகும்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 14, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 14, 2020
Rating:




கருத்துகள் இல்லை: