Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

துமிந்தவிற்காக மன்னிப்பு கேட்டு வந்தவர்களை விரட்டியடித்த ஜனாதிபதி !

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பை அடிப்படையாக கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுக்க வருகைதந்தவர்களை ஜனாதிபதி திட்டி விரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 08ம் திகதி இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை சந்திக்க சென்று துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளனர். இதன்போது அவர்கள் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல்பதிவுகளினால் ஏற்பட்டுள்ள நிலைமையை பயன்படுத்தி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும் இந்த திட்டத்தினால் கோபமடைந்த ஜனாதிபதி  தற்போது தான்  எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போதுமானவை என்றும், எந்தவொரு பிரச்சினையையும் உருவாக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறி அவர்களை திட்டி வெளியேறுமாறு அறிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எவ்வாறாயினும், ஜனாதிபதியை சந்தித்து வெளியே வந்த அமைச்சர்கள் குழு மீண்டும் கலந்துரையாடியுள்ளதுடன், இந்த திட்டத்தை மீண்டும் வேறொரு நேரத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. so/lnw
துமிந்தவிற்காக மன்னிப்பு கேட்டு வந்தவர்களை விரட்டியடித்த ஜனாதிபதி ! Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 14, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.