Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காணாமற்போனோரின் குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கான செயன்முறையொன்றினத் தயாரிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம் ஜனாதிபதி

காணாமற்போனோரின் குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கான செயன்முறையொன்றினத் தயாரிப்பதற்கு நாம் திட்டமிடப்பட்டுள்ளோம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

தமது அரசியல் நலன்களுக்கு அது முரண்பாடாக உள்ளமையினால் - தமிழ் அரசியல்வாதிகள் எமது அந்த நடவடிக்கைகளை நிராகரித்துள்ளார்கள். இருந்தபோதிலும், காணாமற்போனோரின் குடும்பங்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான எனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நான் உறுதியோடு உள்ளேன்” என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹெனா சிங்கர் அம்மையாரிடம் நான் தெளிவுபடுத்தினேன்.

நேற்று பிற்பகல் சனாதிபதி செயலகத்தில் என்னை அவர் சந்தித்தபோது, எமது அரசாங்கத்தின் “பேண்தகு அபிவிருத்தி” வேலைத்திட்டங்களை அவர் பாராட்டியதுடன் -

வறுமைமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், அரச நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கம், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினையை கையாளுதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நாம் கலந்துரையாடினோம்.

வறுமையை இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகும். குறைந்த வருமானமுடைய ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் ஆகியன தொடர்பில் நான் ஐ.நா பிரதிநிதியிடம் விளக்கினேன்.



அதன் போது - கல்வித்துறை, தகவல் தொழிநுட்ப மேம்பாடு மற்றும் அரச நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கம் போன்ற செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகளை பெற்றுத்தருவதற்கு ஐ.நா பிரதிநிதி முன்வந்தார்.
காணாமற்போனோரின் குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கான செயன்முறையொன்றினத் தயாரிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம் ஜனாதிபதி Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 18, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.