Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வாகனேரி பிரதேசத்தில் இரு சாரார்களுக்கிடையிலான மோதல் நிலையை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த சட்டத்தரணி ஹபீப் றிபான்


2020.05.28 - வியாழக்கிழமை ஒரு சில புரிதல்களில் இடம்பெற்ற குறைபாடுகள் காரணமாக வாகனேரி பிரதேசத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலர் வைத்தியசாலையில் அணுமதிக்கபட்டுள்ள நிலையில் ஒரு சில கடும்போக்குவாதிகள் இதனை அறிந்து இதனை ஒரு இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு முன்னெடுப்புக்களை செய்துவருகின்றனர்.


இச்சூழ்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து இரு தரப்பையும் சந்தித்து பேசி ஒரு சமாதான நிலையினை உருவாக்கும் நோக்கத்தோடு முதல் கட்டமாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கிரூபா, குளத்துமடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பார்த்திபன், வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் காசினாதன் மற்றும் வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ஓவியராஜா ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரை ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளரான சட்டத்தரணி ஹபீப் றிபான் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.


இச்சந்திப்பின்போது இது இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை இதனை இனவாத சக்திகள் ஒரு இனரிதீயான பிரச்சினையாக மாற்றுவதற்கு வடிவமைக்கிறார்கள். நாம் அனைவரும் தெளிவாக நடந்துகொள்ளவேண்டும் என்று அங்குள்ள மக்களிடம்  சட்டத்தரணி ஹபீப் றிபான் வேண்டிக்கொண்டார்.

மேலும் அம்மக்கள் குறித்த இப்பிரச்சினை இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்டதென்றும் இதனை இனப்பிரச்சினையாக காட்ட முற்படமாட்டோம் என்றும் தெளிவாக கூறியிருந்ததாகவும்  சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.


வாகனேரி பிரதேசத்தில் இரு சாரார்களுக்கிடையிலான மோதல் நிலையை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த சட்டத்தரணி ஹபீப் றிபான் Reviewed by www.lankanvoice.lk on மே 29, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.