Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சஜித்தின் ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸார் விசாரணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவை விடுதலை செய்யுமாறு கோரி சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவினால் கடந்த 19ம் திகதி களுத்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி ஆர்ப்பாட்டத்தை  நடத்திய  சஜித் பிரேமதாச உள்ளிட்ட அந்த குழுவின் மீது குற்றம் சாட்டி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் சஜித் பிரேமதாச, முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்  கலந்து கொண்டுள்ளனர். அன்றைய தினம் பொலிஸார்  ஆர்ப்பாட்டத்தை வீடியோ எடுத்ததாகவும், காட்சிகளின்படி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித்தின் ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸார் விசாரணை Reviewed by www.lankanvoice.lk on மே 22, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.