கேரளா மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கேரளா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னதாக கேரளா என்ற மாநிலத்தின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்றப்படும் என்று மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
அந்தத் தீர்மானத்தில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 3-ன்படி மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கேரளா மாநில பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, கேரள சட்டமூலம் 2026-ஐ மாநில சட்டப்பேரவைக்குக் குடியரசுத் தலைவர் பரிந்துரைப்பார்.
கேரளா மாநில சட்டப்பேரவையின் கருத்துகளைப் பெற்ற பிறகு மத்திய அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்.
பெயர் மாற்றம் தொடர்பான மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றும்.
இந்த நடைமுறைகள் முழுமை பெற்றவுடன், கேரளம் என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 26, 2026
Rating:

கருத்துகள் இல்லை: