முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டில் மகாவலி இளைஞர் படையணியை இணைத்துக்கொள்வது குறித்த கலந்துரையாடல்

போதைப்பொருள் தடுப்பு - மகாவலி இளைஞர் படையணி 2026 ஐ நிறுவுவது தொடர்பான கலந்துரையாடல் (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுக் குழுவின் செயலாளரும், ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
அதன்படி, மகாவலி இளைஞர் படையணியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பயிற்சி பெற்ற 600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டில் இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நடைபெறும் தேசிய செயல்பாட்டுக் குழுவில் இது குறித்து மேலும் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 26, 2026
Rating:
கருத்துகள் இல்லை: