Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடலுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது கல்யாண வீதியின் காபட் இடும் பணி இன்று (07) சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


1.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இவ்வீதியானது, 36.7 மில்லியன் ரூபாய் செலவில், பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆசிக், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய பிரதம பொறியியலாளர் ஏ.எம். உவைஸ், கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இஸட்.ஏ.எம்.அஸ்மி, பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர், இணைப்புச் செயலாளர் உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தியினுடைய தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடலுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 07, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.