பீப்பாய் 286 டொலருக்கு கச்சா எண்ணெய் வாங்கியதாக வெளியான செய்தி பொய்
பீப்பாய் 286 டொலருக்கு கச்சா எண்ணெய் வாங்கியதாக வெளியான செய்தி பொய்; சட்ட நடவடிக்கை எடுக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானம்
இலங்கை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 286 அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கியதாக பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வாறான தவறான செய்திகள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள கூட்டுத்தாபனம், இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு மத்தியிலும், இலங்கை மிகவும் சாதகமான விலையிலேயே கச்சா எண்ணெயை கொள்வனவு செய்துள்ளது. அதன்படி, அண்மைக்காலமாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் முறையே 71.99, 111.62, 71.81 மற்றும் 113.29 டொலர் ஆகிய விலைகளிலேயே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது. உலகச் சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் சாதகமான நிலை என்றும், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக மட்டுமே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.எஸ்.பி.சி (HSBC) வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜார்ஜ் எல்ஹெடேரி, ஆசிய நாடுகளுக்கு காப்புறுதி மற்றும் ஏனைய செலவுகளால் எண்ணெய் விலை அதிகரிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், இலங்கையில் ஒரு பீப்பாய் 286 டொலர் என அவர் கேள்விப்பட்டதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
බොරතෙල් බැරලයක් ඩොලර් 286කට ගත් බවට පළවන වාර්තා අසත්යයි; නීති මගින් පියවර ගන්නා බව ඛනිජ තෙල් සංස්ථාව පවසයි
ශ්රී ලංකාව බොරතෙල් බැරලයක් ඇමරිකානු ඩොලර් 286ක මිලකට මිලදී ගත් බවට පැතිර යන වාර්තා ලංකා ඛනිජ තෙල් නීතිගත සංස්ථාව (CPC) තරයේ ප්රතික්ෂේප කර තිබේ. මෙම පුවත් අසත්ය සහ නොමඟ යවන සුළු ඒවා බවත්, ආයතනයේ කීර්තිනාමයට හානි කිරීම සම්බන්ධයෙන් ඊට වගකිවයුතු පාර්ශවයන්ට එරෙහිව නීතිමය පියවර ගන්නා බවත් සංස්ථාව නිවේදනයක් නිකුත් කරමින් සඳහන් කරයි.
මධ්ය පෙරදිග කලාපයේ පවතින අස්ථාවරත්වය මධ්යයේ වුවද ශ්රී ලංකාව ඉතා වාසිදායක මිල ගණන් යටතේ බොරතෙල් මිලදී ගෙන ඇති බව සංස්ථාව පෙන්වා දෙයි. ඒ අනුව මෑත කාලීන මිලදී ගැනීම් බැරලයක් සඳහා පිළිවෙළින් ඩොලර් 71.99, 111.62, 71.81 සහ 113.29 වැනි අගයන් ගත් බව සංස්ථාව ප්රකාශ කළේය. HSBC බැංකුවේ ප්රධාන විධායක නිලධාරී ජෝර්ජ් එල්හෙඩරි මහතා හොංකොං හි පැවති ආයෝජන සමුළුවකදී කළ ප්රකාශයක් පදනම් කර ගනිමින් මෙම පුවත පැතිර ගොස් තිබුණි. කෙසේ වෙතත්, සංස්ථාව අවධාරණය කරන්නේ සපුගස්කන්ද පිරිපහදුව සඳහා ගෙන්වන බොරතෙල් වෙනුවෙන් කිසිඳු අවස්ථාවක ඩොලර් 286ක මිලක් ගෙවා නොමැති බවයි.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
CPC Rejects Claims of $286 Per Barrel Crude Oil Purchase; Decides to Pursue Legal Action
The Ceylon Petroleum Corporation (CPC) has strongly denied reports claiming that Sri Lanka procured crude oil at $286 per barrel, describing such information as inaccurate and damaging to the institution’s reputation. The corporation warned that it intends to pursue legal action against parties responsible for spreading misinformation that could cause public unrest and anxiety.
The CPC clarified that it has neither paid nor agreed to pay $286 per barrel for any shipment. Instead, it stated that recent procurements following the Middle East conflict were secured at favorable rates of approximately $71.99, $111.62, $71.81, and $113.29 per barrel, which are competitive compared to global market trends. This clarification follows remarks by HSBC CEO Georges Elhedery, who suggested that Asian buyers often face higher actual costs than Brent benchmarks, citing a figure of $286 he had heard regarding Sri Lanka. The CPC reiterated that all crude oil imports are solely for the Sapugaskanda refinery and that the corporation remains in an advantageous market position.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
பீப்பாய் 286 டொலருக்கு கச்சா எண்ணெய் வாங்கியதாக வெளியான செய்தி பொய்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 17, 2026
Rating:
கருத்துகள் இல்லை: