Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நிதி மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது



நிதி மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது; 2 கோடிக்கும் அதிக பெறுமதியான சாதனங்கள் மீட்பு

கணினி வழி நிதி மோசடிகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனப் பிரஜைகள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்னணுத் தொடர்பு சாதனங்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை 12:25 மணியளவில் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து 'சைனா ஈஸ்டர்ன்' ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6912 ரக விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் தங்களது உடல் மற்றும் ஆடைகளுக்குள் செல்லோடேப் மூலம் ஒட்டி மறைத்து வைத்திருந்த 383 பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், 101 டெப் கணினிகள் மற்றும் 6 வைஃபை ரவுட்டர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். குறித்த சீனப் பிரஜைகளைத் தமது பொறுப்பில் வைத்துள்ள சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

මූල්‍ය වංචා සඳහා මෙරටට පැමිණි චීන ජාතිකයින් 9 දෙනෙකු කටුනායකදී අත්අඩංගුවට

පරිගණක මඟින් මූල්‍ය වංචා සිදු කිරීමේ අරමුණින් මෙරටට පැමිණි චීන ජාතිකයින් 9 දෙනෙකු අද (16) අලුයම කටුනායක ගුවන් තොටුපළේදී අත්අඩංගුවට ගෙන තිබේ. ඔවුන් සන්තකයේ තිබී රුපියල් දෙකෝටි හතළිස් ලක්ෂ විසිදහසක් පමණ වටිනා විද්‍යුත් සන්නිවේදන උපකරණ රේගු නිලධාරීන් විසින් සොයාගෙන ඇත.


අද අලුයම 12:25 ට පමණ චීනයේ කුන්මිං නුවර සිට පැමිණි ගුවන් යානයකින් මොවුන් දිවයිනට පැමිණ ඇති අතර, තම සිරුරේ සහ ඇඳුම් තුළ සඟවාගෙන තිබූ භාවිත කළ ජංගම දුරකථන 383 ක්, ටැබ් පරිගණක 101 ක් සහ වයිෆයි රවුටර් 6 ක් මෙලෙස අත්අඩංගුවට ගෙන තිබේ. සිද්ධිය සම්බන්ධයෙන් ගුවන් තොටුපළ රේගුව වැඩිදුර විමර්ශන පවත්වයි.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

Nine Chinese Nationals Arrested at Katunayake for Computer-Based Financial Fraud

Nine Chinese nationals who arrived in Sri Lanka to carry out computer-based financial frauds were arrested early this morning (16) at the Katunayake Airport. Customs officials seized electronic communication equipment valued at approximately 24,020,000 LKR from their possession.


The suspects arrived at Katunayake at around 12:25 AM today from Kunming, China, via China Eastern Airlines flight MU-6912. Authorities recovered 383 used mobile phones, 101 tablet computers, and 6 Wi-Fi routers hidden and taped inside their clothing. The suspects are currently in the custody of customs officials for further investigation.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
நிதி மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.