ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மல்வத்து மற்றும் அஸ்கிரி அநுநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம்பெற்றார்
பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (15) முற்பகல் கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா விகாரைகளுக்கு விஜயம் செய்து அநுநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, சியாமோபாலி பீட மல்வத்து தரப்பின் அநுநாயக்க அதிவணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரைச் சந்தித்து அவரது நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து, அஸ்கிரி தரப்பு அநுநாயக்க அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
பின்னர், அஸ்கிரி கெடிகே ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அஸ்கிரி தரப்பு அநுநாயக்க தேரரும் பொலன்னறுவை சொலொஸ்மஸ்தானாதிபதியுமான அதிவணக்கத்திற்குரிய வெண்டருவே உபாலி தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இந்தச் சந்திப்புகளின் போது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் கலந்துகொண்டனர்.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා මල්වතු අස්ගිරි අනුනායක හිමිවරුන් බැහැදැක ආශිර්වාද ලබාගනියි
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ඊයේ (15) පෙරවරුවේ මහනුවර මල්වතු සහ අස්ගිරි මහා විහාරයන් වෙත පැමිණ අනුනායක ස්වාමින් වහන්සේලා බැහැදැක එළඹි සිංහල සහ දෙමළ අලුත් අවුරුද්ද වෙනුවෙන් ආශිර්වාද ලබා ගත්තේය.
පළමුව මල්වතු මහා විහාරය වෙත පැමිණි ජනාධිපතිවරයා මල්වතු පාර්ශ්වයේ අනුනායක අතිපූජ්ය දිඹුල්කුඹුරේ විමලධම්ම අනුනායක හිමිපාණන් බැහැදැක උන්වහන්සේගේ සුවදුක් විමසා සුළු වේලාවක් සුහද කතාබහක නිරත විය. අනතුරුව අස්ගිරි පාර්ශ්වයේ අනුනායක අතිපූජ්ය නාරම්පනාවේ ආනන්ද අනුනායක හිමිපාණන් බැහැදැක ආශිර්වාද ලබාගත් ජනාධිපතිවරයා, අස්ගිරි ගෙඩිගේ රජමහා විහාරය වෙතද පැමිණියේය. එහිදී අස්ගිරි පාර්ශ්වයේ අනුනායක පොළොන්නරුව සොලොස්මස්ථානාධිපති අතිපූජ්ය වෙඩරුවේ උපාලි අනුනායක හිමිපාණන් බැහැදැක ආශිර්වාද ලබාගැනීම සිදුවිය. සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්ය වෛද්ය නලින්ද ජයතිස්ස මහතා ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට එක්වූහ.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
President Anura Kumara Dissanayake Receives Blessings from Malwathu and Asgiri Anunayake Theros
President Anura Kumara Dissanayake visited Kandy yesterday (15) morning to pay his respects and receive blessings for the Sinhala and Tamil New Year from the Anunayake Theros of the Malwathu and Asgiri chapters.
During his visit to the Malwathu Maha Viharaya, the President met with the Most Venerable Dimbulkumbure Wimaladhamma Anunayake Thero and engaged in a brief discussion regarding his wellbeing. Subsequently, the President met with the Most Venerable Narampanawe Ananda Anunayake Thero of the Asgiri Chapter to seek blessings. He also visited the Asgiri Gedige Rajamaha Viharaya, where he met the Most Venerable Wendaruwe Upali Anunayake Thero, the Anunayake of the Asgiri Chapter and Chief Incumbent of the Polonnaruwa Solosmasthana. Minister of Health and Mass Media, Dr. Nalinda Jayatissa, and other officials accompanied the President during these religious observances.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 16, 2026
Rating:
கருத்துகள் இல்லை: