இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்திப்பு
இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) கலாநிதி நய்யார் நசீர் (Nayyar Naseer), கௌரவ சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (21) நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் சுனைரா லதீஃப் (Zunaira Latif) மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர். கலாசார பாரம்பரியம் மற்றும் நட்பு நிறைந்த இலங்கையில் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றக் கிடைத்தமை குறித்து பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவிவரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை ஆக்கபூர்வமான நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக அவர் உறுதியளித்தார்.
புதிய உயர்ஸ்தானிகருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த சபாநாயகர், இலங்கை எதிர்கொண்ட போர்ச் சூழல் மற்றும் ‘தித்வா’ சூறாவளி அனர்த்தம் போன்ற அனைத்து நெருக்கடியான காலங்களிலும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இலங்கை-பாகிஸ்தான் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
ශ්රී ලංකාවේ නව පකිස්තාන මහ කොමසාරිස්වරයා, කථානායකවරයා හමුවෙයි
ශ්රී ලංකාවේ අභිනව පකිස්තාන මහ කොමසාරිස් මේජර් ජෙනරාල් (විශ්රාමික) ආචාර්ය නයාර් නසීර් (Nayyar Naseer) මහතා කථානායක වෛද්ය ජගත් වික්රමරත්න මහතා පසුගියදා (21) පාර්ලිමේන්තුවේදී හමුවිය. මෙම හමුව සඳහා ශ්රී ලංකාවේ පකිස්තාන නියෝජ්ය මහ කොමසාරිස් සුනෙයිරා ලතීෆ් (Zunaira Latif) මහත්මිය සහ පාර්ලිමේන්තුවේ මහලේකම් කුෂානි රෝහණදීර මහත්මිය සහභාගී වූහ.
ශ්රී ලංකාව වැනි සංස්කෘතික උරුමයෙන් පොහොසත් මිත්රශීලී රටක මහ කොමසාරිස්වරයා ලෙස කටයුතු කිරීමට ලැබීම ගෞරවයක් බව නසීර් මහතා මෙහිදී ප්රකාශ කළේය. දශක ගණනාවක් තිස්සේ දෙරට අතර පවතින මිත්රත්වය තවදුරටත් ශක්තිමත් කරමින් ද්විපාර්ශ්වික සබඳතා වඩාත් ඵලදායී මට්ටමකට ගෙන යාමට තමන් කැපවී සිටින බවද මහ කොමසාරිස්වරයා අවධාරණය කළේය.
මෙහිදී අදහස් දැක්වූ කථානායකවරයා, යුද සමයේදී මෙන්ම ‘දිත්වා’ (Ditwah) සුළි කුණාටු ව්යසනයේදී ද පකිස්තානය ලබාදුන් සහාය කෘතවේදීව සිහිපත් කළේය. පකිස්තාන රජය සහ ජනතාව ශ්රී ලංකාව මුහුණ දුන් සෑම අර්බුදයකදීම ලබාදුන් අඛණ්ඩ සහයෝගය සැබෑ මිත්රත්වයේ ප්රකාශනයක් බවත්, ශ්රී ලංකා-පකිස්තාන පාර්ලිමේන්තු මිත්රත්ව සංගමය හරහා පාර්ලිමේන්තු අතර සබඳතා තවදුරටත් ශක්තිමත් වන බවත් කථානායකවරයා වැඩිදුරටත් පැවසීය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
Newly Appointed Pakistani High Commissioner to Sri Lanka Meets Hon. Speaker
The newly appointed High Commissioner of Pakistan to Sri Lanka, Major General (Retired) Dr. Nayyar Naseer, held a formal meeting with the Hon. Speaker, Dr. Jagath Wickramaratne, at the Parliament premises recently (21). The meeting was also attended by the Deputy High Commissioner of Pakistan, Ms. Zunaira Latif, and the Secretary General of Parliament, Ms. Kushani Rohanadeera.
During the discussion, the High Commissioner expressed his honor in serving in a country as culturally rich and friendly as Sri Lanka. He reaffirmed his commitment to strengthening the decades-long friendship between the two nations and elevating bilateral relations to a more productive and mutually beneficial level.
Hon. Speaker Dr. Jagath Wickramaratne extended his warm congratulations to the new High Commissioner and expressed deep gratitude to the Government and people of Pakistan for their unwavering support during Sri Lanka's most challenging times. He specifically recalled Pakistan’s vital assistance during the war situation and the devastating natural disaster caused by Cyclone “Ditwah,” describing it as a true reflection of genuine friendship. The Speaker also emphasized that the Sri Lanka-Pakistan Parliamentary Friendship Association provides a vital platform to further enhance ties between the two legislatures.
KR TV Network
KR TV Lankan Voice
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 24, 2026
Rating:

கருத்துகள் இல்லை: