டித்வா புயல் இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு
டித்வா புயல் இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு
டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
டித்வா புயலினால் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளைக் கையளிக்கும் பணிகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கினார்.
முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் புதிய வீடொன்றை வழங்குவது அல்லது வீடொன்றைக் கொள்வனவு செய்வதற்காக 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். அத்தோடு, இன்னும் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்குப் புதிய வீடுகள் கிடைக்கும் வரை அவர்களைத் தற்காலிக வீடுகளில் குடியமர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மிக ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியமர்த்துவது மற்றும் புதிய வீடுகளை வாங்காதவர்களுக்காக வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
දිත්ව්වා සුළි කුණාටුවෙන් පීඩාවට පත් වූවන් සඳහා වන වන්දි මැයි මස අවසන් වන විට ගෙවා අවසන් කරන්න - ජනාධිපතිගෙන් නියෝගයක්
දිත්ව්වා සුළි කුණාටුවෙන් අර්ධ වශයෙන් හානි වූ නිවාස සඳහා රජය විසින් අනුමත කරන ලද රුපියල් ලක්ෂ 5 ක වන්දි මුදල, ඉතා සංකීර්ණ අවස්ථා හැර අනෙකුත් සියලුම ප්රතිලාභීන් සඳහා මැයි මාසය අවසන් වීමට පෙර ගෙවා අවසන් කරන ලෙස ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා නිලධාරීන්ට උපදෙස් දී තිබේ.
සුළි කුණාටුවෙන් හානි වූ නිවාස සඳහා වන්දි ලබා දීම සහ නව නිවාස ලබා දීමේ කටයුතු පිළිබඳ ප්රගති සමාලෝචන සාකච්ඡාවක් අද (22) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී පැවැත්විණි. එහිදී ජනාධිපතිවරයා මෙම නියෝගය නිකුත් කළේය. සම්පූර්ණයෙන්ම විනාශ වූ නිවාස සඳහා රුපියල් ලක්ෂ 50 ක වන්දි මුදලක් හෝ නව නිවසක් ලබා දීමේ ක්රියාවලිය ද කඩිනම් කරන ලෙස ජනාධිපතිවරයා මෙහිදී අවධාරණය කළේය.
තවමත් කඳවුරුවල වෙසෙන ජනතාවට ස්ථිර නිවාස ලැබෙන තෙක් තාවකාලික නිවාස ලබා දීමට කටයුතු කරන ලෙසත්, අවදානම් සහිත ප්රදේශවල වෙසෙන ජනතාව ආරක්ෂිත ස්ථානවල නැවත පදිංචි කරවීමේ සැලසුම් කඩිනම් කරන ලෙසත් ජනාධිපතිවරයා වැඩිදුරටත් උපදෙஸ் දුන්නේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
President Anura Kumara Dissanayake Directs Officials to Disburse Dithva Cyclone Compensation by End of May
President Anura Kumara Dissanayake has directed officials to complete the disbursement of the government-approved compensation of 500,000 rupees for partially damaged houses due to the Dithva cyclone by the end of May. This directive applies to all beneficiaries, except for highly complicated cases.
The President gave these instructions during a progress review meeting held at the Presidential Secretariat today (22) regarding the compensation process and the handover of new houses for cyclone victims. Special attention was paid to the progress of providing either a new house or a compensation of 5 million rupees for those whose homes were completely destroyed.
Furthermore, the President instructed officials to arrange temporary housing for people still living in camps until permanent solutions are provided. Plans to relocate residents from high-risk areas and construct housing schemes for those not receiving direct financial compensation for house purchases were also discussed during the meeting.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 22, 2026
Rating:

கருத்துகள் இல்லை: