Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மூன்று அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்; புதிய அதிகார சபை உதயமாகிறது


மூன்று அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்; புதிய அதிகார சபை உதயமாகிறது


அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தகமற்ற நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ குழுவின் பரிந்துரைக்கமைய, மூன்று முக்கிய அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக நிறுவுவதற்கு அமைச்சரவை அதிரடி தீர்மானம் எடுத்துள்ளது.


இதன்படி, தொழில் அபிவிருத்திச் சபை (IDB), தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபை (NEDA) மற்றும் சிறிய தொழில்முயற்சி அபிவிருத்திப் பிரிவு (SED) ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்படவுள்ளன. இவை அனைத்தையும் உள்ளடக்கி ‘இலங்கை கைத்தொழில் பரிமாற்றம் மற்றும் புத்தாக்க அதிகார சபை’ (Sri Lanka Industrial Transformation and Innovation Authority) எனும் புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.


இந்த புதிய அதிகார சபையை நிறுவுவதற்காக 2025 டிசம்பர் 29 அன்று கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தொழில்நுட்ப உதவியுடன் இதற்கான சட்டக் கட்டமைப்பின் வரைவைத் தயாரித்துள்ளது. இந்த வரைவின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு அறிவுறுத்துவதற்காக அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இந்த நடவடிக்கை மூலம் அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும், தொழில்முயற்சி மற்றும் புத்தாக்கத் துறையில் ஒருமித்த ஒருங்கிணைந்த சேவையை வழங்குவதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


රාජ්‍ය ආයතන තුනක් ඒකාබද්ධ කිරීමට අමාත්‍ය මණ්ඩලයේ අනුමැතිය; නව අධිකාරියක් පිහිටුවීමට පියවර


රජය සතු වාණිජ නොවන ආයතන සමාලෝචනය කිරීම සඳහා පත් කරන ලද නිලධාරී කමිටුවේ නිර්දේශ මත, ප්‍රධාන රාජ්‍ය ආයතන තුනක් ඒකාබද්ධ කර එක් ආයතනයක් ලෙස ස්ථාපිත කිරීමට අමාත්‍ය මණ්ඩලය තීරණය කර තිබේ.


ඒ අනුව, කර්මාන්ත සංවර්ධන මණ්ඩලය (IDB), ජාතික ව්‍යවසාය සංවර්ධන අධිකාරිය (NEDA) සහ සුළු ව්‍යවසාය සංවර්ධන අංශය (SED) යන ආයතන ඒකාබද්ධ කර ‘ශ්‍රී ලංකා කර්මාන්ත පරිවර්තන සහ නවෝත්පාදන අධිකාරිය’ (Sri Lanka Industrial Transformation and Innovation Authority) පිහිටුවීමට නියමිතය.


මෙම නව අධිකාරිය පිහිටුවීම සඳහා 2025.12.29 දින පැවති අමාත්‍ය මණ්ඩල රැස්වීමේදී ප්‍රතිපත්තිමය අනුමැතිය හිමි විය. ආසියානු සංවර්ධන බැංකුවේ (ADB) තාක්ෂණික සහාය ඇතිව සකස් කරන ලද නීතිමය රාමුව පදනම් කර ගනිමින්, නව පනත් කෙටුම්පතක් සකස් කරන ලෙස නීති කෙටුම්පත් සම්පාදකට උපදෙස් දීම සඳහා කර්මාන්ත සහ ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යවරයා ඉදිරිපත් කළ යෝජනාවට මෙලෙස අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය හිමිව තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Cabinet Approves Merger of Three State Institutions into a Single New Authority


The Cabinet of Ministers has approved a proposal to merge three state-owned non-commercial institutions into a single entity, following recommendations from an official committee appointed to review state agencies.


The Industrial Development Board (IDB), the National Enterprise Development Authority (NEDA), and the Small Enterprise Development Division (SED) will be integrated to form the ‘Sri Lanka Industrial Transformation and Innovation Authority.’


Initial policy approval for this merger was granted during the Cabinet meeting held on December 29, 2025. Following extensive consultations and technical assistance from the Asian Development Bank (ADB), a draft legal framework has been prepared. The Cabinet has now approved the proposal submitted by the Minister of Industries and Entrepreneurship Development to instruct the Legal Draftsman to prepare the necessary bill to establish this new authority.


KR TV Network

KR TV Lankan Voice

Local News


22/04/2026. #பர்ஹானா_பதுறுதீன்

மூன்று அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்; புதிய அதிகார சபை உதயமாகிறது Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 22, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.