Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

 


இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (24) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும், தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


දිවයිනේ බොහෝ ප්‍රදේශවලට අද පස්වරුවේ වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි; කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවෙන් අවවාද


දිවයිනේ බොහෝ ප්‍රදේශවල අද (24) පස්වරු 1.00 න් පමණ පසුව වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව පවසයි. අද අලුයම නිකුත් කරන ලද නිවේදනයට අනුව බස්නාහිර, සබරගමුව, මධ්‍යම, වයඹ සහ දකුණු පළාත්වල ඇතැම් ස්ථානවලට මි.මී. 75 ට වැඩි තරමක් තද වැසි ඇති විය හැක.


දකුණු පළාතේ සහ කළුතර දිස්ත්‍රික්කයේ වෙරළබඩ ප්‍රදේශවල උදෑසන කාලයේදී ද වැසි ඇති විය හැකි අතර මධ්‍යම, සබරගමුව, උතුරු-මැද සහ ඌව පළාත්වලත් වවුනියාව සහ කුරුණෑගල දිස්ත්‍රික්කවලත් ඇතැම් ස්ථානවල අලුයම් කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් පැවතිය හැක.


ගිගුරුම් සහිත වැසි සමග ඇතිවිය හැකි තාවකාලික තද සුළං සහ අකුණු මඟින් සිදු වන අනතුරු අවම කර ගැනීමට අවශ්‍ය පියවර ගන්නා ලෙස මහජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිනු ලැබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Showers or Thundershowers Expected Across Most Parts of Sri Lanka After 1 PM Today


The Department of Meteorology predicts that showers or thundershowers will occur at most places on the island after 1:00 p.m. today (24). According to the forecast issued early this morning, fairly heavy rainfall above 75 mm is likely in some areas within the Western, Sabaragamuwa, Central, North-western, and Southern provinces.


Morning showers are expected in the coastal areas of the Southern province and Kalutara district. Additionally, misty conditions may prevail during the early hours of the morning in the Central, Sabaragamuwa, North-central, and Uva provinces, as well as in the Vavuniya and Kurunegala districts.


The general public is advised to take necessary precautions to minimize damage caused by localized strong winds and lightning during thundershowers.


KR TV Network

KR TV Lankan Voice

Local News

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 24, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.