களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் முன்னாள் நீதவானுக்கு விளக்கமறியல்; தான் பணியாற்றிய நீதிமன்றத்திலேயே கைதியான அதிர்ச்சிச் சம்பவம்
களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் முன்னாள் நீதவானுக்கு விளக்கமறியல்; தான் பணியாற்றிய நீதிமன்றத்திலேயே கைதியான அதிர்ச்சிச் சம்பவம்
களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் நீதவானாகக் கடமையாற்றிய ஒருவரை, அதே நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட அதிர்ச்சியான சம்பவமொன்று நேற்று (22) இடம்பெற்றது.
களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் கடந்த காலங்களில் நீதவானாகக் கடமையாற்றிய ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு கடமையாற்றிய போது, நீதிமன்றத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் உள்ளிட்ட சில சான்றுப் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது நீதிமன்ற பதில் பதிவாளருடன் சேர்ந்து, நீதவான் ரஞ்சித்குமார் பொருட்களை மோசடியாகக் கையாண்டதாகக் கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்ற பதில் பதிவாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட நீதவான் ரஞ்சித்குமார் சம்மாந்துறை நீதிமன்றத்துக்கு இடமாற்றப்பட்டு, பின்னர் கடந்த ஜனவரி மாதம் 02 ஆம் திகதி பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த வழக்குத் தொடர்பாக நேற்று களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திர மனுவொன்றின் ஊடாக முன்னாள் நீதவான் ரஞ்சித்குமார் முன்னிலையானார். இதன்போது அவரை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் பணியாற்றிய அதே நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, இந்த விளக்கமறியல் உத்தரவை வழங்கிய களுவாஞ்சிக்குடி நீதவான் ரி. பிரதீபன், இவ்வழக்கிலிருந்து தான் விலகிக்கொள்வதாக நேற்று நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்தார். நீதிச்சேவை ஆணைக்குழுவினால் புதிய நீதவான் ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னரே பிணை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தான் நீதவானாகப் பதவி வகித்த அதே நீதிமன்றத்திலிருந்து ஒரு நீதவான் விளக்கமறியல் கைதியாக அழைத்துச் செல்லப்பட்டமை நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
කළුවාංචිකුඩි අධිකරණයේ හිටපු මහේස්ත්රාත්වරයාට රිමාන්ඩ්; තමන් සේවය කළ අධිකරණයෙන්ම සිරගත වූ පුවතක්
කළුවාංචිකුඩි අධිකරණයේ මහේස්ත්රාත්වරයෙකු ලෙස සේවය කළ පුද්ගලයෙකුට එම අධිකරණයෙන්ම රිමාන්ඩ් බන්ධනාගාරගත කිරීමට නියෝග කළ පුවතක් ඊයේ (22) වාර්තා විය.
මෙසේ රිමාන්ඩ් බන්ධනාගාරගත කර ඇත්තේ කළුවාංචිකුඩි අධිකරණයේ හිටපු මහේස්ත්රාත් ජේ.පී.ඒ. රංජිත් කුමාර් මහතාය. ඔහු එම අධිකරණයේ සේවය කළ කාලය තුළ එහි නඩු භාණ්ඩ ගබඩාවේ තිබූ රන් ආභරණ ඇතුළු නඩු භාණ්ඩ අතුරුදන් වීම සම්බන්ධයෙන් පොලිසිය කළ විමර්ශනවලදී ඔහු සහ අධිකරණ වැඩබලන රෙජිස්ට්රාර්වරයා ඊට සම්බන්ධ බව අනාවරණය වී ඇත.
මේ සම්බන්ධයෙන් අධිකරණ වැඩබලන රෙජිස්ට්රාර්වරයා මීට පෙර අත්අඩංගුවට ගෙන රිමාන්ඩ් කර තිබුණි. මහේස්ත්රාත් රංජිත් කුමාර් මහතාගේ වැඩ තහනම් කර තිබූ අතර, ඊයේ ඔහු මෝසමක් මගින් අධිකරණයේ පෙනී සිටි අවස්ථාවේදී එළඹෙන මැයි මස 04 වනදා දක්වා රිමාන්ඩ් කිරීමට නියෝග කෙරුණි.
නියෝගය නිකුත් කළ මහේස්ත්රාත් ටී. ප්රදීපන් මහතා මෙම නඩුවෙන් තමන් ඉවත් වන බවත්, නව මහේස්ත්රාත්වරයෙකු පත් කිරීමෙන් පසු ඇප අයදුම්පත ඉදිරිපත් කළ හැකි බවත් ප්රකාශ කළේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Former Kaluwanchikudy Magistrate Remanded by the Same Court
A shocking incident took place yesterday (22) where a former Magistrate of the Kaluwanchikudy Court was ordered to be remanded by the same court.
The suspect, J.P.A. Ranjithkumar, served as a Magistrate at the Kaluwanchikudy Court previously. Investigations revealed that during his tenure, gold jewelry and other evidence stored in the court's warehouse went missing. Police inquiries found that the Magistrate, along with the acting registrar, had allegedly misappropriated these items.
While the acting registrar was already in remand, Magistrate Ranjithkumar was suspended from service in early January. Yesterday, appearing before the court via a motion, he was ordered to be remanded until May 04.
Current Magistrate T. Pradeepan, who issued the remand order, publicly announced his recusal from the case. He noted that a bail application could be filed once a new Magistrate is appointed by the Judicial Service Commission.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 23, 2026
Rating:

கருத்துகள் இல்லை: