முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் தேசிய சூரா சபை திருத்தங்களை முன்மொழிவு..
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) தேசிய சூரா சபை திருத்தங்களை முன்மொழிந்துள்ளது
2026 ஜனவரி 13 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிலிருந்து தேசிய ஷூரா சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான விதந்துரைகளை முன்வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கிணங்க தேசிய ஷூரா சபை சிவில் அமைப்புக்கள் மற்றும் உலமாக்களது ஆலோசனைகளைப் பெற்று அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. மேற்படி அறிக்கை கடந்த 15.04.2026 அன்று நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது.
முக்கிய பரிந்துரைகள்:
திருமண வயது 18 ஆக நிர்ணயம்: முஸ்லிம் ஆண் மற்றும் பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆண்டுகளாக இருக்க வேண்டும். விதிவிலக்கான சூழ்நிலைகளில் மாத்திரம், 16-18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு காழி நீதிபதிகள் குழுவின் அனுமதியுடன் திருமணம் செய்ய முடியும்.
மணமகளின் கையொப்பம் கட்டாயமாக்கல்: திருமணப் பதிவின் போது மணமகனின் கையொப்பத்துடன், மணமகளும் தனது சம்மதத்தை உறுதிப்படுத்தி கையொப்பமிடுவதற்கான இடம் திருமணச் சான்றிதழில் ஒதுக்கப்பட வேண்டும்.
பலதார மணத்திற்கு முறையான கட்டுப்பாடுகள்: பலதாரமணம் புரிய விரும்பும் ஒருவர், தனது மனைவியர் அனைவரையும் சமமாக நடத்துவார் என்பதற்கான உறுதிப் பிரமாணத்தை (Solemn Declaration) காழி நீதிபதிகள் குழுவிடம் வழங்க வேண்டும். மீறுபவர்களுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் நட்டஈடு கோரும் அதிகாரம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
நவீனமயமாக்கப்பட்ட காழி நீதிமன்றங்கள்: நாடு ஒன்பது வலயங்களாகப் பிரிக்கப்பட்டு தலா ஒவ்வொரு வலயத்திற்கும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட (3 ஆண்கள், 2 பெண்கள்) 'காழி நீதிபதிகள் குழு' அமைக்கப்பட வேண்டும்.
தேசிய ஷூரா சபை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளனம் உள்ளிட்ட 13 முன்னணி அமைப்புகள் மற்றும் முக்கிய உலமாக்கள் இதற்குத் தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
මුස්ලිම් විවාහ හා දික්කසාද නීතිය (MMDA) සම්බන්ධයෙන් ජාතික ශුරා සභාව සංශෝධන යෝජනා කරයි
2026 ජනවාරි 13 වන දින අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්යාංශය විසින් කරන ලද ඉල්ලීමකට අනුව, මුස්ලිම් විවාහ හා දික්කසාද නීතියේ සිදු කළ යුතු සංශෝධන පිළිබඳ වාර්තාවක් ජාතික ශුරා සභාව විසින් සකස් කරන ලදී. සිවිල් සංවිධාන සහ ප්රමුඛ උලමාවරුන්ගේ උපදෙස් හා අනුමැතිය සහිතව සකස් කළ මෙම වාර්තාව 2026.04.15 වන දින අධිකරණ අමාත්යාංශය වෙත යොමු කර ඇත.
ප්රධාන නිර්දේශ:
විවාහ වීමේ වයස අවුරුදු 18 ලෙස නියම කිරීම: මුස්ලිම් පුරුෂයෙකු සහ කාන්තාවකගේ අවම විවාහ වයස අවුරුදු 18 විය යුතුය. සුවිශේෂී අවස්ථාවලදී පමණක් අවුරුදු 16-18 අතර කාන්තාවන්ට කාසි විනිසුරු මඩුල්ලේ අවසරය මත විවාහ විය හැක.
මනාලියගේ අත්සන අනිවාර්ය කිරීම: විවාහ ලියාපදිංචියේදී මනාලයාගේ අත්සන සමඟ මනාලිය ද සිය කැමැත්ත තහවුරු කරමින් අත්සන් තැබීම සඳහා විවාහ සහතිකයේ ඉඩ වෙන් කළ යුතුය.
බහු විවාහ සඳහා විධිමත් පාලනයක්: බහු විවාහයක් අපේක්ෂා කරන අයෙකු තමා සියලු භාර්යාවන්ට සමානව සලකන බවට කාසි විනිසුරු මඩුල්ල හමුවේ දිවුරුම් ප්රකාශයක් (Solemn Declaration) ලබා දිය යුතුය. මෙය උල්ලංඝනය කරන්නන්ට එරෙහිව සිවිල් අධිකරණයේ වන්දි ඉල්ලීමට කාන්තාවන්ට අවස්ථාව ලබා දිය යුතුය.
කාසි අධිකරණ නවීකරණය: දිවයින කලාප නවයකට බෙදා, එක් කලාපයකට සාමාජිකයන් පස් දෙනෙකුගෙන් (පිරිමි 3, කාන්තා 2) යුත් 'කාසි විනිසුරු මඩුල්ලක්' ස්ථාපිත කළ යුතුය.
ජාතික ශුරා සභාව, සමස්ත ලංකා මුස්ලිම් ලීග් තරුණ පෙරමුණු සම්මේලනය ඇතුළු සංවිධාන 13ක් සහ ප්රමුඛ උලමාවරුන් මේ සඳහා සිය අනුමැතිය ලබා දී ඇත.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
National Shoora Council Proposes Amendments to Muslim Marriage and Divorce Act (MMDA)
Following a request from the Ministry of Justice and National Integration on January 13, 2026, the National Shoora Council (NSC) prepared a report on proposed amendments to the MMDA. After consulting key civil organizations and leading Ulamas, the finalized proposals were submitted to the Ministry on April 15, 2026.
Key Recommendations:
Minimum Marriage Age set at 18: The minimum age for marriage for both Muslim males and females should be 18 years. In exceptional circumstances, females aged 16-18 may marry with the approval of a Quazi Board of Judges.
Mandatory Signature of the Bride: In addition to the groom's signature, space should be allocated in the marriage certificate for the bride to sign and confirm her consent during registration.
Proper Controls on Polygamy: Anyone wishing to practice polygamy must provide a Solemn Declaration to the Quazi Board of Judges, affirming that he will treat all wives equally. Women should be granted the power to claim compensation in civil courts against those who violate this.
Modernized Quazi Courts: The country should be divided into nine zones, with a 'Quazi Board of Judges' established for each zone, consisting of five members (3 men and 2 women).
Thirteen organizations, including the National Shoora Council and the All Ceylon Muslim League Youth Fronts Federation, along with prominent Ulamas, have endorsed these proposals.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் தேசிய சூரா சபை திருத்தங்களை முன்மொழிவு..
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 17, 2026
Rating:
கருத்துகள் இல்லை: