Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இந்தோனேசியக் கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ பாய்மரக் கப்பல் கொழும்பு வருகை


இந்தோனேசியக் கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ பாய்மரக் கப்பல் கொழும்பு வருகை; 26 நாடுகளின் மாணவ அதிகாரிகள் பங்கேற்பு

இந்தோனேசியக் கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BIMA SUCI - 945’ எனும் பாய்மரக் கப்பல், நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (ஏப்ரல் 15, 2026) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ‘ASEAN Plus Cadet Sail (APCS) – 2026’ திட்டத்தின் கீழ் வருகை தந்துள்ள இக்கப்பலில், இந்தோனேசிய மாணவ அதிகாரிகளுடன் 26 வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ அதிகாரிகளும் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய உற்சாகமாக வரவேற்றனர். ‘SAIL SHIP’ வகையைச் சேர்ந்த இக்கப்பலுக்கு கொமாண்டர் சுகெங் ஹரியான்டோ கட்டளை அதிகாரியாகச் செயற்படுகின்றார். இக்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பயிற்சிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இக்குழுவினர் நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

ඉන්දුනීසියානු නාවික හමුදාවට අයත් යාත්‍රා නෞකාවක් කොළඹ වරායට

ඉන්දුනීසියානු නාවික හමුදාවට අයත් ‘KRI BIMA SUCI - 945’ නැමති යාත්‍රා නෞකාව සුහද සංචාරයක් සඳහා ඊයේ (අප්‍රේල් 15) කොළඹ වරායට පැමිණියේය. ‘ASEAN Plus Cadet Sail (APCS) – 2026’ වැඩසටහන යටතේ පැමිණි මෙම නෞකාවේ ඉන්දුනීසියානු පුහුණු නිලධාරීන්ට අමතරව රටවල් 26 ක පුහුණු නිලධාරීන් පිරිසක්ද ගමන් කරති.

මෙම නෞකාව කොළඹ වරායට පැමිණි අවස්ථාවේදී ශ්‍රී ලංකා නාවික හමුදාව විසින් නාවික සම්ප්‍රදායානුකූලව එය උණුසුම් ලෙස පිළිගනු ලැබීය. කොමාණ්ඩර් සුගෙන්ග් හරියන්ටෝ මෙහි අණදෙන නිලධාරී ලෙස කටයුතු කරයි. මෙම සංචාරය අතරතුර දෙරටේ නාවික හමුදාවන් අතර සබඳතා වර්ධනය කර ගැනීම සඳහා වැඩසටහන් කිහිපයක් සංවිධානය කර ඇති අතර එම පිරිස දිවයිනේ වැදගත් ස්ථාන නැරඹීමටද නියමිතය.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

Indonesian Naval Sail Training Ship ‘KRI BIMA SUCI - 945’ Arrives in Colombo

The Indonesian Navy’s sail training ship ‘KRI BIMA SUCI - 945’ arrived at the Port of Colombo yesterday (April 15, 2026) for a goodwill visit. Part of the ‘ASEAN Plus Cadet Sail (APCS) – 2026’ initiative, the vessel is carrying naval cadets from Indonesia as well as from 26 other foreign nations.

The Sri Lanka Navy welcomed the ship in accordance with naval traditions upon its arrival. Commanded by Commander Sugeng Haryanto, the crew and cadets are scheduled to participate in various joint programs and training sessions aimed at enhancing bilateral cooperation between the two navies. During their stay, the group will also visit several key historical and tourist attractions across the country.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
இந்தோனேசியக் கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ பாய்மரக் கப்பல் கொழும்பு வருகை Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.