Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

செம்மணி மனிதப் புதைகுழி: 11 ஆவது நாள் அகழ்வில் மேலும் மூன்று என்பு எச்சங்கள் அடையாளம்


 செம்மணி மனிதப் புதைகுழி: 11 ஆவது நாள் அகழ்வில் மேலும் மூன்று என்பு எச்சங்கள் அடையாளம்


யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11 ஆவது நாள் இன்று (07.05.2026) யாழ்ப்பாண நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக 3 மனித என்பு எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2 என்பு எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட மனித என்பு எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 260 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட என்பு எச்சங்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது. இந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது மாத்திரம் இதுவரை மொத்தம் 17 மனித என்பு எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி நிரஞ்சன் குறிப்பிட்டார்.


KR TV Network

KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி



චෙම්මනි සමූහ මිනීවල: 11 වන දින කැණීම්වලදී තවත් අස්ථි කොටස් තුනක් හඳුනා ගැනේ


යාපනය චෙම්මනි සින්දුපාති සමූහ මිනීවලේ තෙවන අදියරේ කැණීම් කටයුතුවල 11 වන දිනය අද (07.05.2026) යාපනය මහේස්ත්‍රාත් එස්. ලෙනින්කුමාර් මහතා ඉදිරියේ පැවැත්විණි. මෙහිදී අලුතින් මිනිස් අස්ථි කොටස් 3ක් හඳුනාගෙන ඇති අතර ඉන් අස්ථි කොටස් 2ක් සම්පූර්ණයෙන්ම කැණීම් කර ගොඩගෙන තිබේ.


ඒ අනුව, චෙම්මනි සමූහ මිනීවලෙන් මේ දක්වා හඳුනාගෙන ඇති මුළු මිනිස් අස්ථි කොටස් සංඛ්‍යාව 260 දක්වා ඉහළ ගොස් ඇත. එමෙන්ම මේ දක්වා සම්පූර්ණයෙන්ම කැණීම් කර ගොඩගෙන ඇති අස්ථි කොටස් සංඛ්‍යාව 256 කි. මෙම තෙවන අදියරේ කැණීම් කටයුතුවලදී පමණක් මේ වන විට මිනිස් අස්ථි කොටස් 17ක් සම්පූර්ණයෙන්ම ගොඩගෙන ඇති බව මාධ්‍ය වෙත අදහස් දැක්වූ නීතිඥ නිරංජන් මහතා ප්‍රකාශ කළේය.


KR TV Network

KR TV Lankan Voice

දේශීය පුවත්


Chemmani Mass Grave Excavation: Day 11 – Three More Remains Identified


The 11th day of the third phase of excavations at the Chemmani Sindupathi mass grave in Jaffna was conducted today (07.05.2026) in the presence of Jaffna Magistrate S. Lenin Kumar. During today's proceedings, 3 new human skeletal remains were identified, and 2 remains were fully excavated and recovered.


With this, the total number of human skeletal remains identified at the Chemmani site has reached 260. Furthermore, the total number of remains fully excavated to date stands at 256. Attorney-at-Law Niranjan, speaking to the media, noted that 17 human skeletal remains have been fully recovered during this third phase of excavation alone.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

செம்மணி மனிதப் புதைகுழி: 11 ஆவது நாள் அகழ்வில் மேலும் மூன்று என்பு எச்சங்கள் அடையாளம் Reviewed by KR TV LANKAN VOICE on மே 08, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.