Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கனமழை மற்றும் சாத்தியமான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு தொடர்பான விழிப்புணர்வு

 


09.05. 2026 சனிக்கிழமை இரவு 8.00 மணி


கனமழை மற்றும் சாத்தியமான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு தொடர்பான விழிப்புணர்வு


வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற்றம் பெறவுள்ளது.


இது அடுத்து வரும் நாட்களில் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால் நேற்று (08.05.2026) முதல் வடக்கு and கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்க தொடங்கியுள்ள மழை எதிர்வரும் 13.05.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை நாளை முதல் பரவலடைவதோடு செறிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக நாளை (10.05.2026) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இதனால் மிக கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலையினால் இலங்கையின் ஊவா மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், மேல் மாகாணம் என்பவற்றின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக நாளை (10.05.2026) பிற்பகலில் முல்லைத்தீவு, வவுனியா, கண்டி, மட்டக்களப்பு, காலி, களுத்துறை மாவட்டங்கள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.


நாளை (10.05.2026) மாலை குறிப்பாக 5.30 மணிக்கு பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.


அதேவேளை நாளை பிற்பகல் 3.00 மணியளவில் வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.


நாளை மறுதினம் (11.05.2026) பிற்பகல் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், தம்புள்ளை, கண்டி, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்கள் கனமழையைப் பெறும்.


நாளை மறுதினம் (11.05.2026) பிற்பகல் 3.00 மணியளவில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும், பதுளை மாவட்டத்திற்கும், வடக்கு மாகாணத்தின் கிழக்கு பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.


எதிர்வரும் 12.05.2026 பிற்பகலில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும், பதுளை, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களுக்கும் கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே கடந்த சில நாட்களாக கிடைத்து வரும் கன மழை காரணமாக இலங்கையின் பல பகுதிகளிலும் குளங்கள் மற்றும் ஆறுகள் வான் பாயத் தொடங்கியுள்ளன.


எனவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் கிடைக்க விருக்கும் கனமழை சில பகுதிகளுக்கு வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அத்தோடு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் ஏற்கெனவே கன மழை கிடைத்தது வருகிறது. பல பகுதிகளில் நிலம் முழு நீர்க்கொள்ளளவோடு உள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மத்திய மற்றும் ஊவா மாகாண உறவுகள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.


அத்தோடு நாளை மறுதினம் முதல் முதல் இலங்கையின் தெற்கு, கிழக்கு, வடக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் நாளை மறுதினம் முதல் இக்கடற்பகுதிகளுக்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது சிறந்தது.


கடந்த ஆண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மே மாதம் அதிக மழை கிடைத்திருந்தது. குறிப்பாக வரலாற்றின் அதி கூடிய மழை கிடைத்த மே மாதமாக கடந்த ஆண்டு மே மாதம் விளங்கியது. இவ்வாண்டும் மே மாதம் கன மழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த பல ஆண்டுகளாக மே மாதம் என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மழை குறைந்த மாதங்களில் ஒன்று. இப்போது அது கனமழை கிடைக்கும் மாதங்களில் ஒன்றாக மாற்றம் பெறுகிறது. காலநிலை மாற்றம் இது போன்ற வியத்தகு வித்தைகளை உருவாக்கும்.


-நாகமுத்து பிரதீபராஜா-


KR TV Network

KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி


2026.05.09 සෙනසුරාදා රාත්‍රී 8.00


තද වැසි සහ ඇති විය හැකි ගංවතුර, නායයෑම් පිළිබඳ දැනුවත් කිරීම


බෙංගාල බොක්ක මුහුදු ප්‍රදේශයේ නිරිතදිග කොටසේ ශ්‍රී ලංකාවට ගිනිකොන දෙසින් පවතින සුළං සුළිය හෙට දිනයේදී පීඩන අවපාතයක් දක්වා වර්ධනය වනු ඇත.


එය ඉදිරි දිනවලදී ශ්‍රී ලංකාවේ නැගෙනහිර සහ උතුරු වෙරළට ආසන්නව උතුරු දෙසට ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.


මේ හේතුවෙන් ඊයේ (2026.05.08) සිට උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළු දිවයිනේ බොහෝ ප්‍රදේශවලට ආරම්භ වී ඇති වැසි තත්ත්වය එළඹෙන 2026.05.13 දක්වා පවතිනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. මෙම වැසි හෙට සිට දිවයින පුරා ව්‍යාප්ත වන අතර තද වැසි ඇති විය හැක.


විශේෂයෙන් හෙට (2026.05.10) සිට උතුරු සහ නැගෙනහිර පළාත්වලට ඉතා තද වැසි ඇති විය හැක. උතුරු සහ නැගෙනහිර පළාත්වල සියලුම දිස්ත්‍රික්කවලට තද වැසි ඇති වීමේ හැකියාවක් පවතී. එමෙන්ම මෙම පීඩන අවපාතය හේතුවෙන් ශ්‍රී ලංකාවේ ඌව, මධ්‍යම, දකුණ, වයඹ සහ බස්නාහිර පළාත්වල බොහෝ ප්‍රදේශවලට තද වැසි ඇති වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.


විශේෂයෙන් හෙට (2026.05.10) පස්වරුවේ මුලතිව්, වවුනියාව, මහනුවර, මඩකලපුව, ගාල්ල සහ කළුතර දිස්ත්‍රික්කවලට තද වැසි ඇති වීමේ හැකියාවක් පවතී.


හෙට (2026.05.10) සවස් කාලයේ විශේෂයෙන් පස්වරු 5.30 න් පසු යාපනය සහ කිලිනොච්චි දිස්ත්‍රික්කවල බොහෝ ප්‍රදේශවලට තද වැසි ඇති විය හැක.


එමෙන්ම හෙට පස්වරු 3.00 ට පමණ වයඹ පළාතේ බොහෝ ප්‍රදේශවලට තද වැසි ඇති වීමේ හැකියාවක් පවතී.


අනිද්දා (2026.05.11) පස්වරුවේ වවුනියාව, මන්නාරම, මුලතිව්, අනුරාධපුරය, දඹුල්ල, මහනුවර, මඩකලපුව, නුවරඑළිය සහ මොනරාගල දිස්ත්‍රික්කවලට තද වැසි ඇති වනු ඇත.


අනිද්දා (2026.05.11) පස්වරු 3.00 ට පමණ නැගෙනහිර පළාතේ බොහෝ ප්‍රදේශවලටත්, බදුල්ල දිස්ත්‍රික්කයටත්, උතුරු පළාතේ නැගෙනහිර ප්‍රදේශවලටත් තද වැසි ඇති වීමේ හැකියාවක් පවතී.


එළඹෙන 2026.05.12 පස්වරුවේ නැගෙනහිර පළාතේ බොහෝ ප්‍රදේශවලටත්, බදුල්ල, මුලතිව්, වවුනියාව, කිලිනොච්චි සහ මන්නාරම දිස්ත්‍රික්කවලටත් තද වැසි ඇති වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.


පසුගිය දින කිහිපය තුළ ලැබුණු තද වැසි හේතුවෙන් ශ්‍රී ලංකාවේ බොහෝ ප්‍රදේශවල වැව් සහ ගංගා පිටාර ගැලීමට පටන් ගෙන ඇත.


එබැවින් මෙම පීඩන අවපාතය හේතුවෙන් ලැබෙන තද වැසි නිසා ඇතැම් ප්‍රදේශවල ගංවතුර තත්ත්වයක් ඇති විය හැකි බව අපේක්ෂා කෙරේ.


මධ්‍යම සහ ඌව පළාත්වල බොහෝ ප්‍රදේශවලට මේ වන විටත් තද වැසි ලැබෙමින් පවතී. බොහෝ ප්‍රදේශවල පස ජලයෙන් සංතෘප්ත වී පවතී. මෙම ප්‍රදේශවලට අඛණ්ඩව වැසි ඇති වීමේ හැකියාවක් පවතින බැවින් නායයෑම් පිළිබඳව මධ්‍යම සහ ඌව පළාත්වල ජනතාව දැඩි අවධානයෙන් සිටීම අත්‍යවශ්‍ය වේ.


අනිද්දා සිට ශ්‍රී ලංකාවට දකුණු, නැගෙනහිර සහ උතුරු දෙසින් වන මුහුදු ප්‍රදේශ රළු විය හැකි බැවින් ධීවරයින් අනිද්දා සිට එම මුහුදු ප්‍රදේශවල මසුන් ඇල්ලීමේ කටයුතුවලින් වැළකී සිටීම යෝග්‍ය වේ.


පසුගිය වසරේ මැයි මාසයේදී ද උතුරු සහ නැගෙනහිර පළාත්වල බොහෝ ප්‍රදේශවලට තද වැසි ලැබුණි. විශේෂයෙන් ඉතිහාසයේ මැයි මාසයක ලැබුණු වැඩිම වර්ෂාපතනය පසුගිය වසරේ මැයි මාසයේදී වාර්තා විය. මේ වසරේ මැයි මාසයේදී ද තද වැසි අපේක්ෂා කෙරේ.


පසුගිය වසර කිහිපය වන තෙක් මැයි මාසය යනු උතුරු සහ නැගෙනහිර පළාත්වලට අඩු වර්ෂාපතනයක් ලැබෙන මාසයකි. දැන් එය තද වැසි ලැබෙන මාසයක් බවට පත්වෙමින් තිබේ. දේශගුණික විපර්යාස මෙවැනි පුදුම සහගත වෙනස්කම් ඇති කරයි.


-නාගමුත්තු ප්‍රදීපරාජා-


KR TV Network

KR TV Lankan Voice

දේශීය පුවත්


Saturday, 09.05.2026, 8.00 PM


Awareness regarding Heavy Rain and Potential Floods, Landslides


The atmospheric circulation currently prevailing southeast of Sri Lanka in the southwestern part of the Bay of Bengal is expected to develop into a low-pressure area tomorrow.


It is anticipated to move northward along the eastern and northern coasts of Sri Lanka in the coming days.


Due to this, the rainfall that started yesterday (08.05.2026) in many parts of the country, including several areas of the Northern and Eastern Provinces, is expected to continue until 13.05.2026. This rain is expected to become widespread and intensify from tomorrow.


Specifically, starting tomorrow (10.05.2026), the Northern and Eastern Provinces are expected to receive very heavy rainfall. There is a possibility of heavy rain in all districts of the Northern and Eastern Provinces. Additionally, this low-pressure situation is expected to bring heavy rain to many parts of the Uva, Central, Southern, North-Western, and Western Provinces of Sri Lanka.


Tomorrow afternoon (10.05.2026), Mullaitivu, Vavuniya, Kandy, Batticaloa, Galle, and Kalutara districts are likely to receive heavy rain.


Tomorrow evening (10.05.2026), particularly after 5.30 PM, heavy rain is possible in many parts of the Jaffna and Kilinochchi districts.


Meanwhile, around 3.00 PM tomorrow, heavy rain is possible in many parts of the North-Western Province.


The day after tomorrow (11.05.2026) afternoon, Vavuniya, Mannar, Mullaitivu, Anuradhapura, Dambulla, Kandy, Batticaloa, Nuwara Eliya, and Monaragala districts will receive heavy rain.


The day after tomorrow (11.05.2026) around 3.00 PM, heavy rain is possible in many parts of the Eastern Province, Badulla District, and the eastern parts of the Northern Province.


On 12.05.2026 afternoon, heavy rain is expected in many parts of the Eastern Province and in the Badulla, Mullaitivu, Vavuniya, Kilinochchi, and Mannar districts.


Due to the heavy rain received over the past few days, tanks and rivers in many parts of Sri Lanka have already begun to overflow.


Therefore, the heavy rain expected from this low-pressure system is anticipated to cause flood disasters in some areas.


Furthermore, many parts of the Central and Uva Provinces have already been receiving heavy rain, and the soil in many areas is fully saturated. As heavy rain is expected to continue in these areas, it is essential for residents in the Central and Uva Provinces to be extremely cautious regarding landslide events.


Additionally, from the day after tomorrow, the southern, eastern, and northern sea areas of Sri Lanka will be rough. Therefore, it is advisable for fishermen to avoid fishing activities in these sea areas from the day after tomorrow.


Last year, many parts of the Northern and Eastern Provinces received high rainfall in May. Specifically, last May was recorded as the month with the highest historical rainfall for May. This year as well, May is expected to bring heavy rain.


For many years, May was one of the months with low rainfall in the Northern and Eastern Provinces. Now, it is changing into a month with heavy rainfall. Climate change creates such astonishing phenomena.


-Nagamuttu Pradeeparajah-


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

கனமழை மற்றும் சாத்தியமான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு தொடர்பான விழிப்புணர்வு Reviewed by KR TV LANKAN VOICE on மே 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.