Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மூன்று மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரிய குருணாகல் பிரதி மேயர் மொஹமட் அஷார்தீன் கைது


 மூன்று மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரிய குருணாகல் பிரதி மேயர் மொஹமட் அஷார்தீன் கைது


குருணாகல் மாநகர சபைக்குட்பட்ட பஸ் நிலையம் மற்றும் பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக, வர்த்தகர் ஒருவரிடம் 3 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் மொஹமட் அஷார்தீன் மொய்னுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த பணத்தைப் பெற்றுக்கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


சந்தேக நபரான மொஹமட் அஷார்தீன், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


KR TV Network

KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி


රුපියල් මිලියන 3ක අල්ලසක් ලබාගත් කුරුණෑගල නියෝජ්‍ය නගරාධිපති මොහොමඩ් අෂාර්ඩීන් අත්අඩංගුවට


කුරුණෑගල මහ නගර සභාවේ බස් නැවතුම්පළ සහ පොදු වැසිකිළි පිරිසිදු කිරීමේ කොන්ත්‍රාත්තුව ලබාදීම සඳහා ව්‍යාපාරිකයෙකුගෙන් රුපියල් මිලියන 3ක අල්ලසක් ඉල්ලා ලබාගත් බව කියන සිද්ධියක් සම්බන්ධයෙන් කුරුණෑගල නියෝජ්‍ය නගරාධිපති මොහොමඩ් අෂාර්ඩීන් මොයිනුඩීන් අල්ලස් හෝ දූෂණ විමර්ශන කොමිෂන් සභාව මගින් අත්අඩංගුවට ගෙන ඇත.


සැකකරු බත්තරමුල්ල ප්‍රදේශයේ හෝටලයකදී අදාළ මුදල ලබාගනිමින් සිටියදී මෙලෙස අත්අඩංගුවට ගෙන ඇති බව වාර්තා වේ.


සැකකරු පසුගිය පළාත් පාලන මැතිවරණයේදී රිෂාඩ් බදියුඩීන් මහතාගේ සමස්ත ලංකා මහජන කොංග්‍රසය (ACMC) නියෝජනය කරමින් තරග කර තේරී පත් වූවෙකි.


KR TV Network

KR TV Lankan Voice

දේශීය පුවත්


Kurunegala Deputy Mayor Mohamed Azardeen Arrested for Requesting Rs. 3 Million Bribe


The Deputy Mayor of the Kurunegala Municipal Council, Mohamed Azardeen Moinudeen, has been arrested by the Commission to Investigate Allegations of Bribery or Corruption for allegedly soliciting a bribe of Rs. 3 million from a businessman.


According to reports, the bribe was requested in exchange for awarding a tender to clean the Kurunegala bus stand and public toilets. The suspect was apprehended while accepting the cash at a hotel in Battaramulla.


It is noteworthy that the suspect was elected during the last local government elections representing Rishad Bathiudeen’s All Ceylon Makkal Congress (ACMC).


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

மூன்று மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரிய குருணாகல் பிரதி மேயர் மொஹமட் அஷார்தீன் கைது Reviewed by KR TV LANKAN VOICE on மே 09, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.