சவூதி சட்ட விவகாரங்களுக்கான பிரதி அமைச்சரைச் சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்
சவூதி சட்ட விவகாரங்களுக்கான பிரதி அமைச்சரைச் சந்தித்தார் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத், சவூதி அரேபியாவின் சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலாவியை ரியாத்தில் உள்ள அந்நாட்டு நீதி அமைச்சில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பின் போது நீதித்துறை விவகாரங்கள் மற்றும் சட்ட ஒத்துழைப்புத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன், அத்துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். மேலும், பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களைப் பரிமாறிக்கொள்வது (Transfer of Sentenced Persons) மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை விரைந்து இறுதி செய்வது குறித்தும் முக்கியமாக ஆராயப்பட்டது. இச்சந்திப்பில் தூதுவருடன் இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரும் சான்சரி தலைவருமான தமித்ரி சமங்கிகா மற்றும் சஜீத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகள் விவகாரம்
සවුදි නීති කටයුතු පිළිබඳ නියෝජ්ය අමාත්යවරයා සහ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වඩ් අතර හමුවක්
සවුදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වඩ් මහතා, සවුදි අරාබියේ නීති සහ ජාත්යන්තර සහයෝගීතාව පිළිබඳ නියෝජ්ය අමාත්ය මිෂාල් බින් අලි අල්-බලාවි මහතා රියාද්හි පිහිටි සවුදි අධිකරණ අමාත්යාංශයේදී හමුවී සාකච්ඡා පවත්වා තිබේ.
මෙම හමුවේදී අධිකරණ ක්ෂේත්රය සහ නීතිමය සහයෝගීතාව සම්බන්ධයෙන් දෙරට අතර පවතින සබඳතා තවදුරටත් පුළුල් කිරීම පිළිබඳව දෙපාර්ශ්වයම අදහස් හුවමාරු කරගත් අතර, එම ක්ෂේත්රවල සහයෝගීතාව ඉදිරියට ගෙන යාමට ඇති කැපවීම යළි තහවුරු කරන ලදී. එමෙන්ම දෙරටටම වැදගත් වන කරුණු කෙරෙහි විශේෂ අවධානය යොමු වූ අතර, විශේෂයෙන් ශ්රී ලංකාව සහ සවුදි අරාබිය අතර දඬුවම් නියම වූ පුද්ගලයින් හුවමාරු කර ගැනීම සහ අන්යෝන්ය නීතිමය සහය පිළිබඳ ද්විපාර්ශ්වික ගිවිසුම් කඩිනමින් අවසන් කිරීම සම්බන්ධයෙන්ද වැඩිදුරටත් සාකච්ඡා විය. මෙම අවස්ථාව සඳහා තානාපතිවරයා සමඟ රියාද්හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ දෙවන ලේකම් දමිත්රි සමංගිකා මෙනවිය සහ සජීත් මහතා ද එක්ව සිටියහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / රාජ්යතාන්ත්රික සහ ද්විපාර්ශ්වික සබඳතා පුවත්
Sri Lankan Ambassador Ameer Ajwad Meets Saudi Deputy Minister for Laws and International Cooperation
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, O.L. Ameer Ajwad, met with Deputy Minister for Laws and International Cooperation of Saudi Arabia, Mishaal bin Ali Al-Balawi, at the Ministry of Justice in Riyadh.
During the diplomatic engagement, both sides deliberated on enhancing mutual cooperation within judicial and legal spheres, reaffirming their shared commitment to deepening bilateral institutional ties. The discussions focused extensively on areas of bilateral interest, placing specific emphasis on expediting the finalization of key legal frameworks, including bilateral agreements on the Transfer of Sentenced Persons and Mutual Legal Assistance between Sri Lanka and Saudi Arabia. The Ambassador was accompanied by Ms. Damithri Samangika, Second Secretary and Head of Chancery, along with Mr. Sajeeth from the Embassy of Sri Lanka in Riyadh.
KR TV Network - Local News / Diplomatic and Bilateral Relations


Comments