பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்குத்
தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்
(வயது 76) இவர் 2007ம் ஆண்டு, அதிபராக இருந்தபோது பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தை முடக்கி, நெருக்கடி நிலையை அறிவித்தார். இது தொடர்பாக முஷாரப் மீது லாகூர் ஐகோர்ட்டில் தேச துரோக வழக்கு நிலுவையில் இருந்தது. அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக 2016ம் ஆண்டு துபாய் சென்றார். இன்னும் நாடு திரும்பவில்லை.
தற்போது துபாய் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் முஷாரப்புக்கு
தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை நீதிமன்றம் உத்தரவு
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 17, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 17, 2019
Rating:

கருத்துகள் இல்லை: