Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்தில் அண்மையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம். பைஸார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல் பிரதம அதிதியாகவும்கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர் கௌரவ அதிதியாகவும்வைத்தியர்களான றஸீன்ஷாபி மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.எம். றஹ்மான் ஆகியோர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


இப்பாடசாலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டுஇணைப்பாட விதான செயற்பாடுகளில் வலயமாகாண மட்டம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டுமற்றும் ஒவ்வொரு தரத்திலும் தரம் 03 தொடக்கம்  தரம்  08 வரை தவணைப்பரீட்சையில் டொப் 10 வரையும் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவித்தும் பரிசில்கள் வழங்கப்பட்டன.


பாடசாலையின் பிரதி அதிபர் றிப்கா அன்ஸாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இவ்விழாவில்கல்லூரி ஆசிரியர்கள்மாணவர்கள்அபிவிருத்தி உறுப்பினர்கள்பழைய ஆசிரியர்கள் - மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 20, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.