Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மற்றுமொரு அழகிய அபிவிருத்திப் பணி காத்தான்குடி மண்ணில்


ஏ.எல்.டீன் பைரூஸ்
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மற்றுமொரு அழகிய அபிவிருத்திப் பணி காத்தான்குடி மண்ணில். நிர்மாணப்பணிகளை பார்வையிட்டார் ஹிஸ்புல்லா.

முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் சிந்தனைக்கமைய காத்தான்குடி ஆற்றங்கரையில் பொழுதுபோக்கு தளம் ஒன்று நவீன முறையில் மின் அலங்காரத்துடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.


கலாநிதி ஹிஸ்புல்லா ஆளுநராக இருந்த காலப்பகுதியில் அன்னாரது பணிப்பிற்கமைய கிழக்கு மாகாண சுற்றுலா அமைச்சினால் சுமார் 3.0 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்படி பொழுதுபோக்கு தளம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


உள்ளுர் மற்றும் வெளியூர் மக்களின் சுற்றுலா தளமாக பயன்படுத்தப்படவிருக்கும் மேற்படிமேம்பாலம் வடிவிலான பொழுதுபோக்குத் தளமானது சிறியோர்கள் முதல் பெரியோர்களுக்கு சிறந்த பொழுது போக்கினை அனுபவிப்பதற்கு ஏதுவாக அமையும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.


காத்தான்குடி ஆற்றங்கரை மஸ்ஜிதுல் ஈமான் பள்ளிவாயலுக்கு முன்னால்) நிர்மாணிக்கப்பட்டு வரும்  மேற்படி பொழுதுபோக்கு தளத்தின் நிர்மாணப் பணிகள் யாவும் முடியும் தருவாயில் உள்ளது.

மேற்படி நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவுற்றதும் மக்கள் பாவனைக்காக முன்னாள் ஆளுநர்கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்  வினால் திறக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மற்றுமொரு அழகிய அபிவிருத்திப் பணி காத்தான்குடி மண்ணில் Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 17, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.