Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் ஆட்சியில் திருட்டுக்கு இடமில்லை சியாட் மீனவர்களிடம் தெரிவிப்பு

(ஊடகப்பிரிவு)

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் ஆட்சியில் திருட்டுக்கு இடமில்லை,மட்டக்களப்பு கடற் தொழில் மீனவர்களின் கடலில் மீன் திருட்டுப்பிரச்சினைக்கு
விரைவில் தீர்வு கிடைக்கும் என அமைப்பாளர் சியாட் மீனவர்களிடம் உறுதியளித்தார்.



மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம் பெறும் கடற் தொழில் மீனவர்களின் மீன் திருட்டுப்பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் நகர சபை உறுப்பினரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ்.எம்.சியாட் மீனவர்களிடம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் மீனவர்கள் கடலில் தொடரும் மீன்திருட்டு விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடற்தொழில் அமைச்சுக்கும் மேற்படி விடயம் தொடர்பாக கொண்டுசெல்வதாக தெரிவித்த அமைப்பாளர் சியாட் மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.


இதன் போது கடந்த காலங்களில் மேற்படி மீன் திருட்டு தொடர்பாக மட்டக்களப்பு கடற் தொழில் மீனவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான ஆவணங்களை அமைப்பாளர் சியாட்டிடம் கையளித்ததுடன் தமது பல்வேறு கோரிக்கை அடங்கிய மகஜரையும் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான நிகழ்வு நேற்று மாலை பூநொச்சிமுனை மீீனவர் சங்கத்தில் இடம்பெற்றது.


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் ஆட்சியில் திருட்டுக்கு இடமில்லை சியாட் மீனவர்களிடம் தெரிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 16, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.