Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்: ஆளுநரின் கேரளப் பயணம் ரத்து


 தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்: ஆளுநரின் கேரளப் பயணம் ரத்து


தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கச் செல்கின்றார். இன்று இரவு கேரளா செல்லவிருந்த தமிழகப் பொறுப்பு ஆளுநரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய்யைச் சந்திப்பதற்காக மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் விஜய்யுடன் அவரது கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இன்று (09) த.வெ.க ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது. வி.சி.க தலைவர் திருமாவளவன் வழங்கிய ஆதரவுக் கடிதத்தைத் த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் காண்பித்தார். வி.சி.க மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன் த.வெ.க-வின் பலம் தற்போது 120 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


KR TV Network

KR TV Lankan Voice

சர்வதேச செய்தி


තමිල්නාඩුවේ රජයක් පිහිටුවීමට විජයි අයිතිවාසිකම් කියයි: ආණ්ඩුකාරවරයාගේ කේරළ සංචාරය අවලංගුයි


තමිල්නාඩුවේ බහුතර බලයකින් රජයක් පිහිටුවීමට අයිතිවාසිකම් කීම සඳහා තමිල්නාඩු වෙට්රි කසාගම් (TVK) නායක විජයි මහතා අද සවස ආණ්ඩුකාරවරයා හමුවීමට නියමිතය. අද රාත්‍රියේ කේරළය බලා යාමට නියමිතව තිබූ ආණ්ඩුකාරවරයාගේ සංචාරය අවලංගු කර ඇති අතර, විජයි මහතා හමුවීම සඳහා සවස 6.30 ට වේලාව වෙන් කර ඇත. මෙම හමුව සඳහා විජයි මහතාට සහාය පළ කරන සන්ධානගත පක්ෂ නායකයින් ද එක්ව සිටිති. කොංග්‍රස් සහ වාම පක්ෂවලින් පසුව, විඩුතලෙයි සිරුතෙයිගල් පක්ෂය (VCK) ද අද (09) TVK රජයක් පිහිටුවීම සඳහා කොන්දේසි විරහිත සහාය පළ කර තිබේ. VCK නායක තිරුමාවලවන් මහතා ලබා දුන් සහාය ලිපිය TVK විධායක ආදව් අර්ජුනා මහතා විසින් මාධ්‍ය වෙත ප්‍රදර්ශනය කරන ලදී. VCK සහ මුස්ලිම් ලීග් සහායත් සමඟ TVK පක්ෂයේ බලය මේ වන විට 120 දක්වා ඉහළ ගොස් ඇත.


KR TV Network

KR TV Lankan Voice

ජාත්‍යන්තර පුවත්


Vijay to Claim Stakes to Form Government: Governor’s Kerala Visit Cancelled


Tamilaga Vettri Kazhagam (TVK) leader Vijay is set to meet the Governor this evening to claim the right to form a government with a majority in Tamil Nadu. The Governor’s scheduled visit to Kerala tonight has been cancelled, and a meeting with Vijay has been fixed for 6:30 PM. Leaders of the allied parties supporting Vijay are also participating in this crucial meeting. Following the support from Congress and Left parties, the Viduthalai Chiruthaigal Katchi (VCK) also extended unconditional support to TVK today (09). TVK executive Aadhav Arjuna displayed the letter of support handed over by VCK leader Thirumavalavan. With the backing of VCK and the Muslim League, TVK’s strength has now risen to 120 seats.


KR TV Network

KR TV Lankan Voice

International News

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்: ஆளுநரின் கேரளப் பயணம் ரத்து Reviewed by KR TV LANKAN VOICE on மே 09, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.