Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காஸா முற்றுகையினை தகர்க்கும் கப்பல் பயணத்தில் இலங்கை வீரமங்கை ஸமீரா மெஹ்பூப்தீன்!


காஸா முற்றுகையினை தகர்க்கும் கப்பல் பயணத்தில் இலங்கை வீரமங்கை ஸமீரா மெஹ்பூப்தீன்!


பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நிலவும் மிக மோசமான முற்றுகையினைத் தகர்ப்பதற்கும், அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கும் சர்வதேச சிவில் சமூக அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஃப்லொடிய்யா’ (Freedom Flotilla) எனும் கப்பல் பயணத்தில், இலங்கையைச் சேர்ந்த வீரமங்கை ஸமீரா மெஹ்பூப்தீன் இணைந்து கொண்டுள்ளார்.


காஸா முற்றுகைக்கு எதிரான உலகப் போராளிகளின் இந்தக் கப்பற்பயணத்தில் கலந்துகொள்வதற்காக ஸமீரா, சர்வ மதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களுடனும், பிரார்த்தனைகளுடனும் அண்மையில் வழியனுப்பி வைக்கப்பட்டார். இது, திரும்பி வர முடியுமா என்று உறுதிபடக் கூற முடியாத ஒரு அபாயகரமான பயணமாக இருந்தாலும், பலஸ்தீன மக்கள் மீதான அவரது அதீத பற்றும், காஸா மக்களின் துயரங்கள் குறித்த ஆதங்கமும் அவரை நிராயுதபாணியாக இந்தப் போர்க்களத்திற்குள் செல்லத் தூண்டியுள்ளது.


தன்னார்வத் தொண்டர், அரசியல் செயற்பாட்டாளர், போராட்டக்காரி எனப் பல பரிமாணங்களைக் கொண்ட ஸமீரா, கடந்த முறையே இந்தக் கப்பற்பயணத்தில் இணைந்து கொள்ள முயற்சித்த போதிலும், பல்வேறு தடைகளால் அது தாமதமாகி இருந்தது. தற்போது அந்த முயற்சி சாத்தியமாகி உள்ளமை அவரது உறுதியான மனப்பான்மையைக் காட்டுகிறது.


குண்டு மழை பொழியும், மிக ஆபத்தான ஒரு இடத்திற்கு வெறுங்கையோடு ஒரு பெண் செல்வது குறித்துச் சிலர் ஆச்சரியமும், இன்னும் சிலர் கவலையும் வெளியிட்ட போதிலும், ஸமீராவின் துணிச்சல் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. போராட்டம் என்பது வீட்டுக்குள் ஒழிந்து கொண்டு கீ-போர்டில் காட்டும் கார்ட்-போர்ட் வீரமல்ல, அது ஃப்லொடிய்யா என்பதை நிரூபிக்கும் வகையில் ஸமீராவின் பயணம் அமைந்துள்ளது. காஸா முற்றுகையைத் தகர்க்கும் உலகப் போராளிகளின் கப்பற்பயணத்தில் ஒரு வீரமங்கையாக ஸமீரா மெஹ்பூப்தீன் திகழ்கிறார்.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

சர்வதேச செய்தி


ගාසා අවහිරය බිඳීමේ නැව් චාරිකාවට ශ්‍රී ලාංකික වීරවරියක වන සමීරා මෙහ්බුබ්දීන් එක්වෙයි!


පලස්තීනයේ ගාසා තීරයේ පවතින ඉතා දරුණු අවහිරය බිඳ දැමීම සඳහා සහ එහි සිටින ජනතාවට අත්‍යවශ්‍ය ආධාර සැපයීම සඳහා ජාත්‍යන්තර සිවිල් සමාජ සංවිධාන විසින් සංවිධානය කර ඇති ‘ෆ්ලොටිලා’ (Freedom Flotilla) නැව් චාරිකාවට ශ්‍රී ලංකාවේ සමීරා මෙහ්බුබ්දීන් එක්වී තිබේ.


ගාසා අවහිරයට එරෙහිව ලෝක ක්‍රියාකාරීන්ගේ මෙම නැව් චාරිකාවට සහභාගී වීම සඳහා සමීරා, සර්ව ආගමික නායකයින්ගේ ආශිර්වාද සහ ප්‍රාර්ථනා සමඟින් මෑතකදී පිටත් විය. මෙය ආපසු පැමිණිය හැකි දැයි කිව නොහැකි ඉතා අවදානම් සහගත ගමනක් වුවද, පලස්තීන ජනතාව කෙරෙහි ඇයගේ ඇති අසීමිත ලැදියාව සහ ගාසා ජනතාවගේ දුක්ඛිත තත්ත්වය පිළිබඳව ඇති කනගාටුව ඇයව නිරායුධව මෙම සටන් බිමට යාමට පෙළඹී ඇත.


ස්වේච්ඡා සේවිකාවක්, දේශපාලන ක්‍රියාකාරිනියක්, සටන්කාරියක් ලෙස විවිධ භූමිකාවන් හොබවන සමීරා, පසුගිය වතාවේද මෙම නැව් චාරිකාවට එක්වීමට උත්සාහ කළද විවිධ බාධක නිසා එය ප්‍රමාද විය. දැනට එම උත්සාහය සාර්ථක වී තිබීම ඇගේ දැඩි මානසිකත්වය පෙන්වයි.


බෝම්බ වර්ෂා පතිත වන ඉතා අනතුරුදායක ස්ථානයකට නිරායුධව කාන්තාවක් යාම පිළිබඳව ඇතැමුන් පුදුමය සහ කනගාටුව පළ කළද, සමීරාගේ ධෛර්යය බොහෝ දෙනාගේ ඇගයීමට ලක්ව ඇත. අරගලය යනු නිවස තුළ සැඟවී සිට යතුරුපුවරුවේ පෙන්වන වීරකමක් නොවන බව, එය ෆ්ලොටිලා බව ඔප්පු කරන ආකාරයෙන් සමීරාගේ ගමන පිහිටා ඇත. ගාසා අවහිරය බිඳීමේ ලෝක ක්‍රියාකාරීන්ගේ නැව් චාරිකාවේ වීරවරියක ලෙස සමීරා මෙහ්බුබ්දීන් වැජඹෙයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

ජාත්‍යන්තර පුවත්


Sri Lankan Heroine Sameera Mehboobdeen Joins Flotilla to Break Gaza Blockade


Sri Lankan woman, Sameera Mehboobdeen, has joined the international civil society's "Freedom Flotilla" to break the severe blockade on the Gaza Strip and deliver essential aid to its people.


Sameera, a long-time volunteer, political activist, and advocate for Palestinian rights, has faced various obstacles in her attempts to join the flotilla previously. Now, her determination has finally brought her aboard this critical mission.


Before her departure, Sameera was bid farewell with blessings and prayers from interfaith religious leaders, highlighting the cross-cultural support for her cause. Despite the significant risks involved and the uncertainty of return, her unwavering dedication to the Palestinian people and her empathy for the people of Gaza has led her on this courageous journey.


While some expressed astonishment and concern for a woman entering a volatile conflict zone empty-handed, Sameera's bravery has been widely lauded. Her action serves as a poignant reminder that true solidarity goes beyond keyboard activism and cardboard heroism; it manifests in tangible actions like the Freedom Flotilla. Sameera Mehboobdeen stands as a testament to the international spirit of resistance against the Gaza blockade.


KR TV Network

KR TV Lankan Voice

International News

காஸா முற்றுகையினை தகர்க்கும் கப்பல் பயணத்தில் இலங்கை வீரமங்கை ஸமீரா மெஹ்பூப்தீன்! Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 23, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.