Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தேசிய மட்டப் போட்டிகளில் தொடர் சாதனையை நிலைநாட்டும் காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயம்


தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலய மாணவர்கள் ஏழு பேர் தெரிவு; வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்கள், மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய இம்மாணவர்கள், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கும் காத்தான்குடி பிரதேசத்திற்கும் பெரும் புகழைத் தேடித்தந்துள்ளனர்.

தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரம்:

பிரிவு III (தரம் 11):

  1. ANM. உமர்

  2. AS. ஸராப் அஹமட்

  3. MN. ஆயிஷா நிஹ்லா

பிரிவு II (தரம் 8):

  1. F. மஹ்தி ஹஸன்

பிரிவு I (தரம் 6):

  1. MA. அப்துல்லாஹ்

  2. AA. அஹமட் கைஸ்

  3. MA. உமர் ஸைனி

கிழக்கு மாகாணத்தில் ஒரே பாடசாலையிலிருந்து அதிகளவான மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இம்மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களான MIM. இஹ்ஸான் மற்றும் MMA. சப்ரி ஆகியோருக்கும், மாணவர்களை ஊக்குவித்து வழிநடத்திய அதிபர் SI. யஸீர் அறபாத் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25.04.2026 அன்று கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியில் இம்மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர். இம்மாணவர்களின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் MM. ஜவாத் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி



ජාතික මට්ටමේ ගණිත ඔලිම්පියාඩ් තරඟාවලිය සඳහා කාත්තාන්කුඩි හිළූරියියා විද්‍යාලයෙන් සිසුන් හත් දෙනෙකු සුදුසුකම් ලබයි

මඩකලපුව මධ්‍යම අධ්‍යාපන කලාපයට අයත් කාත්තාන්කුඩි හිළූරියියා විද්‍යාලයේ සිසුන් හත් දෙනෙකු පළාත් මට්ටමේ ගණිත ඔලිම්පියාඩ් තරඟාවලියෙන් විශිෂ්ට ජයග්‍රහණ ලබා ජාතික මට්ටමේ තරඟාවලිය සඳහා සුදුසුකම් ලබා ඇත.

නැගෙනහිර පළාත් පාසල් අතර පැවති මෙම තරඟාවලියෙන් එකම පාසලකින් වැඩිම සිසුන් පිරිසක් ජාතික මට්ටමට තේරී පත්වූ අවස්ථාව මෙය වන අතර, එමගින් මඩකලපුව මධ්‍යම කලාපයට සහ කාත්තාන්කුඩි ප්‍රදේශයට මහත් අභිමානයක් එක් කර තිබේ.

ජාතික මට්ටමට තේරී පත් වූ සිසුන්:

III වන කාණ්ඩය (11 ශ්‍රේණිය): ඒ.එන්.එම්. උමර්, ඒ.එස්. සරාෆ් අහමඩ්, එම්.එන්. ආයිෂා නිහ්ලා.

II වන කාණ්ඩය (8 ශ්‍රේණිය): එෆ්. මහ්දි හසන්.

I වන කාණ්ඩය (6 ශ්‍රේණිය): එම්.ඒ. අබ්දුල්ලාහ්, ඒ.ඒ. අහමඩ් කයිස්, එම්.ඒ. උමර් සයිනි.

මෙම සිසුන් පුහුණු කළ එම්.අයි.එම්. ඉහ්සාන් සහ එම්.එම්.ඒ. සබ්රි යන ගුරුභවතුන්ටත්, මගපෙන්වීම් ලබා දුන් විදුහල්පති එස්.අයි. යසීර් අරෆාත් මහතා ඇතුළු පාසල් ප්‍රජාවටත් මෙහිදී උපහාර පිදේ. එළඹෙන 2026.04.25 දින කොළඹ ආනන්ද විද්‍යාලයේදී පැවැත්වෙන ජාතික මට්ටමේ තරඟාවලිය සඳහා මෙම සිසුන් සහභාගී වීමට නියමිතය.

කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Seven Students from Kattankudy Hiluriya Vidyalaya Qualify for National Math Olympiad

In a historic achievement for Kattankudy, seven students from Batticaloa Central’s Hiluriya Vidyalaya have qualified for the National Mathematics Olympiad after securing top ranks in the Eastern Provincial level competitions.

This marks the highest number of students from a single school in the Eastern Province to qualify for the national stage, bringing immense pride to the Batticaloa Central Education Zone and the Kattankudy community.

Qualified Students:

Cat III (Grade 11): ANM. Umar, AS. Zaraf Ahmed, MN. Ayeesha Nihla.

Cat II (Grade 8): F. Mahdi Hassan.

Cat I (Grade 6): MA. Abdullah, AA. Ahmed Kais, MA. Umar Zaini.

The school community extended its heartfelt appreciation to teachers Mr. MIM. Ihsan and Mr. MMA. Sabri for their training, and Principal Mr. SI. Yazeer Arafat for his leadership. The students will compete in the National Mathematics Olympiad on 25.04.2026 at Ananda College, Colombo. Special thanks were also conveyed to Zonal Director of Education Ash-Sheikh MM. Javad for his continuous support.

KR TV Network

KR TV Lankan Voice

Local News



தேசிய மட்டப் போட்டிகளில் தொடர் சாதனையை நிலைநாட்டும் காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயம் Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 23, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.