Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை சர்வதேச பாடசாலையின் புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் தூதுவர் சந்திப்பு


ரியாத் இலங்கை சர்வதேச பாடசாலையின் புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் தூதுவர் அமீர் அஜ்வத் விசேட சந்திப்பு

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், ரியாத் இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR) புதிதாக உருவாக்கப்பட்ட பெற்றோர் ஆசிரியர் சங்க (PTA) உறுப்பினர்களை கடந்த ஏப்ரல் 13, 2026 அன்று தூதரக வளாகத்தில் சந்தித்தார். பாடசாலையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

புதிய சங்க உறுப்பினர்களை வரவேற்ற தூதுவர், பாடசாலையின் அபிவிருத்தியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வகிபாகம் மிக முக்கியமானது என வலியுறுத்தினார். பாடசாலைக்கும் வீட்டிற்கும் இடையிலான ஒரு பாலமாக இச்சங்கம் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பெற்றோர் மற்றும் பாடசாலைக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க புதிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கினார். அத்துடன், வெளியேறும் பழைய சங்கத்தினர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான பணிகள் மற்றும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட நவீன கணினி ஆய்வகங்கள் குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது புதிய சங்கத்தின் உப தலைவர் இர்ஷாத் ஹுசைன் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலையின் கல்வித் தரம் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரோபாட்டிக்ஸ் (Robotics) வகுப்புகள், டிஜிட்டல் நூலகம் மற்றும் ஸ்மார்ட் போர்ட் (Smart Board) வசதிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்நிழ்வில் தூதரக அதிகாரிகள், பாடசாலையின் பிரதி அதிபர் ஷகீல் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

KR TV Network
KR TV Lankan Voice
சர்வதேச செய்தி

රියාද් ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසලේ නව දෙමාපිය ගුරු සංගමය තානාපති අමීර් අජ්වඩ් මහතා හමුවෙයි

සෞදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වඩ් මහතා, රියාද් ශ්‍රී ලංකා ජාත්‍යන්තර පාසලේ (SLISR) අලුතින් තේරී පත් වූ දෙමාපිය ගුරු සංගමයේ (PTA) නියෝජිතයන් පසුගිය අප්‍රේල් 13 වනදා තානාපති කාර්යාල පරිශ්‍රයේදී හමුවිය. පාසලේ ඉදිරි සංවර්ධන කටයුතු පිළිබඳව මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කෙරිණි.

නව සංගමයේ සාමාජිකයන් සාදරයෙන් පිළිගත් තානාපතිවරයා, පාසලක දියුණුව සඳහා දෙමාපියන් සහ ගුරුවරුන් අතර ඇති සහයෝගීතාවයේ වැදගත්කම අවධාරණය කළේය. පාසල සහ නිවස අතර ශක්තිමත් සම්බන්ධතාවයක් පවත්වාගෙන යාම සඳහා නව වැඩපිළිවෙළවල් හඳුන්වා දෙන ලෙස ඔහු යෝජනා කළේය. එසේම, පාසල වෙනුවෙන් නවීන පරිගණක විද්‍යාගාර ඇතුළු පහසුකම් සැලසීමට කටයුතු කළ හිටපු දෙමාපිය ගුරු සංගමයේ සේවය ද තානාපතිවරයාගේ ඇගයීමට ලක්විය.

පාසලේ අධ්‍යාපන ප්‍රමිතීන් ඉහළ නැංවීම සඳහා රොබෝ තාක්ෂණ පාඩම් (Robotics), ඩිජිටල් පුස්තකාල සහ ස්මාර්ට් බෝඩ් (Smart Board) පහසුකම් හඳුන්වා දීමට සැලසුම් කර ඇති බව නව සංගමයේ උප සභාපති ඉර්ෂාඩ් හුසේන් මහතා මෙහිදී ප්‍රකාශ කළේය. මෙම හමුව සඳහා තානාපති කාර්යාල නිලධාරීන් සහ පාසලේ නියෝජ්‍ය විදුහල්පතිවරයා ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.

KR TV Network
KR TV Lankan Voice
ජාත්‍යන්තර පුවත්

Ambassador Ameer Ajwad Meets Newly Formed PTA of Sri Lanka International School in Riyadh

The Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad, hosted a meeting with the newly formed Parent-Teacher Association (PTA) of the Sri Lanka International School in Riyadh (SLISR) on April 13, 2026. The meeting, held at the Embassy premises, focused on the future development and academic advancement of the institution.

Ambassador Ajwad emphasized the PTA's vital role as a bridge between home and school, urging members to introduce activities that foster closer cooperation. He commended the outgoing committee for their significant contributions, specifically the establishment of fully equipped computer laboratories for students. 

During the discussion, Vice President of the new PTA, Irshad Hussein, outlined future initiatives aimed at enhancing infrastructure and academic standards, including the introduction of robotics lessons, digital libraries, and smart board facilities. The meeting was attended by senior Embassy officials, the Deputy Principal of SLISR, and representatives from the parent and teacher communities.

KR TV Network
KR TV Lankan Voice
International News
இலங்கை சர்வதேச பாடசாலையின் புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் தூதுவர் சந்திப்பு Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.