97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் ஏந்திய கப்பல் நாளை இலங்கை வருகை
97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் ஏந்திய கப்பல் நாளை இலங்கை வருகை; விநியோகச் சிக்கல்களுக்குத் தீர்வு
மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வருகை தரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கப்பல் மூலம் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அதன் முகாமை பணிப்பாளர் கலாநிதி மயூரா நெத்திகுமார தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் மற்றுமொரு கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளதுடன், அமெரிக்காவிலிருந்து வரும் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் கப்பலில் தற்போது எண்ணெய் ஏற்றப்பட்டு வருவதாகவும், அது இன்றைய தின அளவில் இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் இதுவரை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சவாலாக இருந்த கச்சா எண்ணெய் விநியோகச் சிக்கல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
මධ්ය පෙරදිග යුද්ධයෙන් පසු පළමු බොරතෙල් නැව හෙට දිවයිනට
මධ්ය පෙරදිග කලාපයේ යුද ගැටුම් ආරම්භ වීමෙන් පසු, බොරතෙල් රැගත් පළමු නෞකාව හෙට (17) දිවයිනට ළඟා වීමට නියමිත බව ලංකා ඛනිජ තෙල් ගබඩා පර්යන්ත සමාගම පවසයි.
මෙම නෞකාව මඟින් බොරතෙල් මෙට්රික් ටොන් 97,500ක් මෙරටට රැගෙන එන බව එහි කළමනාකාර අධ්යක්ෂ ආචාර්ය මයුර නෙත්තිකුමාර මහතා ප්රකාශ කළේය. මීට අමතරව මෙම මස අවසානයේදී තවත් නෞකාවක් මෙරටට පැමිණීමට නියමිතය. ඇමෙරිකාවේ සිට පැමිණෙන ඩබ්ලිව්.ටී.අයි (WTI) වර්ගයේ බොරතෙල් නෞකාවටද මේ වන විට තෙල් පටවමින් පවතින අතර එය අද දිනයේ මෙරට බලා ගමන් ආරම්භ කරනු ඇත. මේ හරහා මෙතෙක් පැවති බොරතෙල් සැපයුමේ ගැටලු අවසන් වනු ඇති බවද ඔහු වැඩිදුරටත් සඳහන් කළේය.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
First Crude Oil Shipment After Mideast Conflict to Arrive Tomorrow
The Ceylon Petroleum Storage Terminals Limited has announced that the first ship carrying crude oil since the outbreak of Middle East hostilities is scheduled to arrive in Sri Lanka tomorrow (17).
Dr. Mayura Neththikumara, the Managing Director, stated that the vessel would bring 97,500 metric tons of crude oil to the country. Another shipment is expected by the end of this month. Furthermore, a WTI crude oil vessel from the United States is currently being loaded and is expected to begin its journey to Sri Lanka today. These developments are set to resolve the supply constraints previously faced by the Ceylon Petroleum Corporation.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் ஏந்திய கப்பல் நாளை இலங்கை வருகை
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 16, 2026
Rating:
கருத்துகள் இல்லை: